For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசின் விவேக நடவடிக்கையால் குறைந்த விலையில் தொடர்ந்து கிடைக்கும் மின்சாரம்!

மத்திய அரசின் விவேகமான செயல்பாடுகளால் மக்களுக்கு மின்சாரம் குறைந்த விலையில் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் 3 ஆண்டுகால ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் மக்களுக்கு குறைந்தவிலையில் மின்சாரம் கிடைக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றபோது அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தொலைதூர கிராமங்களில் சூரிய மின்சக்தி போன்றவற்றின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் குறைவு

மின்கட்டணம் குறைவு

மத்திய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் பல மாநிலங்களில் மின்கட்டணம் என்பது குறைக்கப்பட்டுள்ளது. அண்மையில் சண்டிகரில் அனைத்து மின்கட்டணங்களுமே கணிசமாக குறைக்கப்பட்டது. வீடுகளுக்கான மின் கட்டணம் என்பது முதல் 150 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 80 பைசா வசூலிக்கப்பட்டது. இது 65 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு குறைவு?

எவ்வளவு குறைவு?

இதற்கு அடுத்ததாக 400 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ1.48 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுவும் ஒரு யூனிட்டுக்கு ரூ1.21 என குறைக்கப்பட்டுள்ளது. 400 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு வசூலிக்கப்பட்ட ரூ1.56 என்பது ரூ1.28 ஆக குறைக்கப்பட்டது. இதேபோல் அருணாச்சல், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்காளில் மின்கட்டணம் உயர்த்தப்படவே இல்லை.

சக்தி திட்டம்

சக்தி திட்டம்

இந்த மாதம் மத்திய அரசானது மின் உற்பத்திக்கான நிலக்கரி கொள்முதலை சக்தி திட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தியுள்ளது. 2013-14 ஆம் ஆண்டு காலத்தில் 1 கிலோ வாட் மின்சாரத்துக்கு 0.69 கிலோ நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. 2016-17ல் 1 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 0.63 கிலோ நிலக்கரிதான் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 1 யூனிட் மின்சாரம் தயாரிப்பதற்கான நிலக்கரியின் தேவை என்பது 3 ஆண்டுகளில் 8% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அந்த நிலைமை இல்லை

அந்த நிலைமை இல்லை

2012-ம் ஆண்டு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் 2 நாட்கள் கூட மின்சாரம் இல்லாமல் பல கோடி மக்கள் அவதிப்பட்ட நிலைமை இருந்தது. தற்போது 2011-12ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் இந்த மாநிலங்களில் மின்சாரம் கிடைத்து வருகிறது.

கட்டணம் குறைப்பு

கட்டணம் குறைப்பு

சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலமான மின்சாரம் பெறுவதற்கும் மிகக் குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு மார்ச்சில் இருந்து தென்னிந்திய மாநிலங்களுக்கு 116% அளவுக்கு மின்சாரம் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.

உஜாலா, உதய் திட்டங்கள்

உஜாலா, உதய் திட்டங்கள்

மத்திய அரசின் உஜாலா திட்டத்தின் கீழ் 23 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ12,000 கோடி அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் முந்தைய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தி 2004-14ம் ஆண்டு காலத்தைவிட மின்கட்டம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதய் மின் திட்டம் மூலமாக மின்சாரம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.

English summary
A flagship Mission of the Government is to realise the Hon’ble Prime Minister Shri Narendra Modi’s vision of 24x7 Affordable “Power for all” in an environment-friendly manner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X