For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரோ உதவியுடன் சபரிமலையில் நவீன மருத்துவ மையம்.. இந்தியாவிலேயே முதன்முறையாக!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதன் முறையாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் செயற்கைகோள் உதவியுடன் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை ஓட்டியுள்ள கேரள மாநிலத்தில் பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு மகர விளக்கு காலத்திற்கான பூஜைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இங்கு டெலி மெடிசன் சிகிச்சை ஏற்பாடுகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Modernized medical camp in sabarimala

பாதிக்கப்படும் பக்தர்கள்...

சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சில சமயங்களில் நெரிசல் மூலம் விபத்து ஏற்படுவதும், மாரடைப்பால் மரணமடையும் சம்பவங்களும் ஏற்படுகின்றன.

உடனடி சிகிச்சை...

மேலும் சபரிமலை வனப்பகுதியில் இருப்பதால் உடனடியாக சிகிச்சை அளிப்பதால் சி்க்கல் ஏற்படுகிறது. உயர் சிகிச்சை கிடைக்க வேண்டுமானால் சுமார் 100 கிமீ தூரம் உள்ள கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். அதற்குள் நோயாளிகள் நிலைமை சிக்கலாகி விடும்.

இஸ்ரோ உதவியுடன்...

இதை கருத்தில் கொண்டு சபரிமலையில் டெலி மெடிசன் சிகிச்சை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் செயற்கோள் உதவியுடன் பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

டெலி மெடிசன்...

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் டெலி மெடிசன் முறையில் சபரிமலை பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.

முதல்கட்ட பணிகள்...

பம்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் இதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இது வெற்றிகரமாக அமைந்துள்ளதாக பம்பையில் உள்ள டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
The Trivankur devasam board has started modernist medical camp in sabarimala for pilgrims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X