For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

23 மத்திய கேபினட் அமைச்சர்களும் ஒதுக்கப்பட்ட இலாகாக்களும்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி தனது அமைச்சர்களுக்கு ஒதுக்கிய துறைகள் குறித்து அறிவித்துள்ளார்.

நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக திங்கட்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 23 கேபினட் மற்றும் 22 இணை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதில் கேபினட் அமைச்சர்களுக்கான துறைகள் இன்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டன. இந்த அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை இன்று காலை வெளியிட்டது.

Modi allots portofolios to his cabinet ministers

அதன் விவரம்:

நரேந்திர மோடி - ஆட்சிப் பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி, விண்வெளி ஆய்வு, கொள்கள் விவகாரம் மற்றும் பிரித்துக் கொடுக்கப்படாத துறைகள்

ராஜ்நாத் சிங் - உள்துறை

சுஷ்மா ஸ்வராஜ் - வெளியுறவுத் துறை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை

அருண் ஜேட்லி - நிதி, பாதுகாப்பு, நிறுவன விவகாரத் துறை

வெங்கையா நாயுடு - நகர்ப்புற மேம்பாடு, வறுமை ஒழிப்பு, நாடாளுமன்ற விவகாரத் துறை, வீட்டு வசதித் துறை

நிதின் கட்காரி - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை

சதானந்த கவுடா - ரயில்வே துறை

உமா பாரதி - நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை சுத்தப்படுத்தும் துறை

நஜ்மா ஹெப்துல்லா - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

கோபிநாத் முண்டே - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் வடிகால் துறை

ராம் விலாஸ் பாஸ்வான் - நுகர்வோர் விவகாரத் துறை, உணவு மற்றும் பொது வினியோகத் துறை

கல்ராஜ் மிஸ்ரா - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

மேனகா காந்தி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை

அனந்த் குமார் - ரசாயனம் மற்றும் உரத் துறை

ரவி சங்கர் பிரசாத் - சட்டம், தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை

அசோக் கஜபதி ராஜு - விமான போக்குவரத்து துறை

அனந்த் கீதே - கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை

ஹர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்துதல் துறை

நரேந்திர சிங் தோமார் - சுரங்கங்கள், எஃகு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

ஜூவல் ஓராம் - பழங்குடியின நலத்துறை

ராதா மோகன் சிங் - விவசாயத் துறை

தவார் சந்த் கெஹ்லாட் - சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை

ஸ்மிருதி இரானி - மனிதவள மேம்பாட்டுத் துறை

டாக்டர் ஹர்ஷ்வர்தன் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை

English summary
PM Narendra Modi has allotted portfolios to his cabinet ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X