For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி. ரயில் விபத்தில் பலியானோருக்கு ரூ. 2 லட்சம்: மோடி உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: கோரக்நாத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், கோராப்பூரை நோக்கி நேற்று சென்றுக் கொண்டிருந்த கோராக்நாத் எக்ஸ்பிரஸ் ரயில், எதிரே நின்றிருந்த சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 22 பலியாகினர்.

Modi announces relief for UP train accident victims

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை நேற்று தெரிவித்துள்ளார். கேபினட் செயலாளரை உடனடியாக தொடர்பு கொண்ட அவர், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான உதவிகளை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், இன்று தனது முதல் நாள் பணிகளை தொடங்கிய பிரதமர் மோடி, கோராக்நாத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஒரு லட்சம், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என வடகிழக்கு ரயில்வே துறை நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
In his first official direction after taking charge, Prime Minister Narendra Modi Tuesday sanctioned an ex-gratia of Rs.2 lakh each to the next of kin of those killed in a train accident a day earlier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X