For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2014ல் சாய்வாலா... 2019ம் ஆண்டில் ரபேல்வாலா...மோடிக்கு எதிராக கொந்தளித்த மமதா பானர்ஜி

Google Oneindia Tamil News

கொல்கத்தா:2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பு மோடி சாயாவாலா(தேநீர் விற்பவர்), தற்போது ரபேல் வாலா (ரபேல் ஒப்பந்தம்) என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தொடங்கிய உலக முதலீட்டாளர் மாநாடு இன்றுடன் முடிவடைந்தது. பின்னர் செய்தியாளர்களுக்கு முதல்வர் மமதா பானர்ஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மோடிக்கு இந்தியாவை பற்றி எதுவும் தெரியாது. கோத்ரா கலவரம் மற்றும் வன்முறைக்கு பிறகே மோடியை பற்றி தெரிந்தது.

Modi becomes chaiwalla before elections, rafalewalla after it says mamata banerjee

மாநில போலீஸ் பணிகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது. பிரதமர் மோடியானவர்... ரபேல் போர் விமான கொள் முதலில் மாஸ்டர், பணமதிப்பு ரத்து நடவடிக்கையின் மாஸ்டர் , ஊழலில் கெட்டிக்காரர் மோடி.

மோடி அரசில் ரிசர்வ் வங்கி கவர்னர் முதல் சிபிஐ இயக்குநர் வரை உயரதிகாரிகள் ராஜினாமா செய்வது ஏன்?
எதிர்க்கட்சிகள் ஒன்றாக பணியாற்றுவதால் பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆனால், எனக்கு பயம் கிடையாது. நான் என்னுடைய பாதையில் போராடுகிறேன்.

எங்களது கொள்கைக்கு நான் எப்போதும் மதிப்பளிக்கிறேன். பணத்தின் சக்தி காரணமாக அவர் பிரதமராகி விட்டார் என்பது துரதிஷ்டவசமானது . அந்த நாற்காலியை மதிக்கிறோம். ஆனால் மோடியை அல்ல என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

English summary
Modi becomes 'chai walla' during polls and 'Rafale walla' after it says West Bengal chief minister Mamata Banerjee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X