For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் கல்வித்தகுதி என்ன?.. டெல்லி பல்கலை.யில் ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்களுக்கு நீதிமன்றம் அனுமதி

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் கல்வி தகுதி பற்றி ஆய்வு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது. மூன்று பேர் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள்.

    பிரதமர் மோடி 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பை முடித்தார் என்று பாஜக கட்சி தெரிவித்து வருகிறது. இது உண்மைதானா என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது.

    அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோர் இந்த கேள்வியை கேட்டு இருந்தார்கள். தற்போது இதில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

    தனிமனித ரகசியம்

    தனிமனித ரகசியம்

    பொதுவாக தகவல் அறியும் உரிமை ஆணையம்தான் இந்த தகவல் கொடுக்க வேண்டும். ஆனால் டெல்லி பல்கலைக்கழகம் இதுகுறித்த தகவல் அளிக்க மறுத்துவிட்டது. இது தனிமனித சுதந்திரம் என்று கூறி அந்த பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.

    அடுத்த காரணம்

    அடுத்த காரணம்

    தகவல் அறியும் உரிமை ஆணையமும் இதற்கு மேல் இதில் எந்த விசாரணையும் செய்யாமல் இருந்துள்ளது. மேலும் 20 வருடத்திற்கு முன்பு உள்ளத்தகவலை எல்லாம் கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். அந்த தகவல்களை சீக்கிரம் அழிக்க போகிறோம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    பிரச்னையை உருவாக்கும்

    பிரச்னையை உருவாக்கும்

    இதற்கு எதிராக அந்த மூன்று பேரும் மேல்முறையீடு செய்தார்கள். இதையடுத்து அரசு தரப்பு, மோடியின் படிப்பு தகவலை வெளியிடுவது பிரச்னையை உருவாக்கும் என்றனர். மேலும் இதுபோன்ற தகவலை கொடுக்க கூடாது என்றும் குறிப்பிட்டனர்.

    அனுமதி அளித்தார்கள்

    அனுமதி அளித்தார்கள்

    இந்த நிலையில் டெல்லி கல்லூரியில் 1978ல் படித்தவர்களின் விவரங்களை ஆராய அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது. அவர்கள் கல்லூரிக்கு சென்று அப்போது படித்தவர்களின் பட்டியலை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Delhi High Court has allowed right to information activists to intervene in the matter pertaining to the information about students who graduated from the Delhi University in 1978, the year Prime Minister Narendra Modi is said to have completed his graduation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X