For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி தினமும் 5 காளான்கள் சாப்பிடுகிறார், ஒன்றின் விலை ரூ. 80,000 ஒன்லி: காங்கிரஸ் தலைவர்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி காளான்கள் சாப்பிட்டுத் தான் கலர் ஆனார்

    காந்திநகர்: பிரதமர் மோடி சிகப்பாக தினமும் 5 காளான்கள் சா்பபிடுகிறார். ஒரு காளானின் விலை ரூ. 80 ஆயிரம் என காங்கிரஸ் தலைவர் அல்பேஷ் தாகூர் தெரிவித்துள்ளார்.

    குஜராத் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் குஜராத் காங்கிரஸ் தலைவர் அல்பேஷ் தாகூர் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது,

    காளான்

    காளான்

    மோடிஜி சாப்பிடுவதை உங்களால் சாப்பிட முடியாது. ஏன் என்றால் அது ஏழைகளின் உணவு அல்ல என்று ஒருவர் என்னிடம் கூறினார். அப்படி என்ன அவர் சாப்பிடுகிறார் என்று கேட்டேன். காளான்கள் என்றார். காளான்கள் தான் எளிதில் கிடைக்குமே என்று நான் கூறினேன்.

    இறக்குமதி

    இறக்குமதி

    காளான்கள் எளிதில் கிடைக்கும் ஆனால் மோடி சாப்பிடுவது தைவானில் இருந்து வரவழைக்கப்படுகிறது. ஒரு காளானின் விலை ரூ. 80 ஆயிரம். அவர் தினமும் 5 காளான்கள் சாப்பிடுகிறார். ஆக நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ரூ. 4 லட்சம் காளான்களுக்கு மட்டுமே செலவு செய்கிறார் என்றார் அந்த நபர்.

    முதல்வர்

    மோடி குஜராத் முதல்வர் ஆனதில் இருந்து விலை உயர்ந்த காளான்களை தினமும் சாப்பிடுகிறாராம். 35 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மோடியின் புகைப்படத்தை பார்த்தேன்.

    சிகப்பு

    சிகப்பு

    35 ஆண்டுகளுக்கு முன்பு மோடி என்னை போன்று கருப்பாக இருந்துள்ளார். ஆனால் தற்போது சிகப்பாகிவிட்டார். மோடி காளான்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ. 4 லட்சமும், மாதத்திற்கு ரூ. 1 கோடியே 20 லட்சமும் செலவு செய்கிறார் என்றார் அல்பேஷ் தாகூர்.

    English summary
    Gujarat congress leader Alpesh Thakor said in a rally that PM Modi is eating five imported mushrooms a day and each mushroom costs Rs. 80,000. He added that Modi has become fair after eating these mushrooms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X