For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கான்பூர் ரயில் விபத்து... நரேந்திர மோடி இரங்கல்... விசாரணைக்கு உத்தரவு!

கான்பூர் அருகே பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

By Arivalagan
Google Oneindia Tamil News

கான்பூர்: கான்பூர் ரயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பொக்ரயான் என்ற இடத்தில் பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

accident

மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. இதில் எஸ்2 பெட்டிதான் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளது. இங்குதான் உயிரிழப்பும் அதிகம் என்று கூறப்படுகிறது.


இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இதுதொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


இன்னொரு டிவிட்டில், அனைத்து மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. நடமாடும் ரயில்வே மருத்துவப் பிரிவுகளும் விரைந்துள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர் என்று சுரேஷ் பிரபு குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஹெல்ப்லைன் எண்கள் குறித்தும் ஒரு டிவிட் போட்டுள்ளார் சுரேஷ் பிரபு.


பிரதமர் நரேந்திர மோடியும் விபத்து குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.

English summary
Prime minister Narendra Modi has expressed shock and grief over the Kanpur train accident and inquired railway minister Suresh Prabhu about the mishap.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X