For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூமியின் சாம்பியன் ஆனார் பிரதமர் மோடி.. ஏன்? என்ன காரணம்?!

பிரதமர் மோடிக்கு ஐநா சபை '' பூமியின் சாம்பியன்'' என்று விருதை வழங்கி கவுரவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடிக்கு ஐநா சபை '' பூமியின் சாம்பியன்'' என்று விருதை வழங்கி கவுரவித்து இருக்கிறது.

கடந்த மாதம் 26ம் தேதி ஐநா சபையில் பொதுக்குழு கூட்டத்தில் இந்த வருடத்தில் யாருக்கு எல்லாம் ''பூமியின் சாம்பியன்'' விருது வழங்க வேண்டும் தீர்மானிக்கப்பட்டது. இது சுற்றுசூழல் துறைக்கு ஐநா அளிக்கும் மிக உயரிய விருதாகும்.

உலகில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டு வந்த, மக்களின் மனதில் முக்கிய மாற்றத்தை உருவாக்கியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். சமயங்களில் நிறுவனங்களுக்கும் இந்த விருது வழங்கப்படுவது வழக்கம்.

[ பார்வை குறைபாடு உடையவர்களும் இனி ரூபாயை கண்டுபிடிக்கலாம்.. ஆர்.பி.ஐ வெளியிட போகும் ஆப்! ]

இன்று வாங்கினார்

இன்று வாங்கினார்

இந்த நிலையில்தான் பிரதமர் மோடிக்கு ''பூமியின் சாம்பியன்'' விருது அளிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் நடந்த விழாவில் அவருக்கு இந்த விருது ஐநா மூலம் அளிக்கப்பட்டது. இதனால் அவருக்கு உலகம் முழுக்க பல நாடுகளில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

யார்

யார்

இந்த வருடம் பிரதமர் மோடிக்கு மட்டுமில்லாமல் இன்னும் சிலருக்கும் இந்த விருது அளிக்கப்பட்டு இருக்கிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரூன், கேரளாவின் கொச்சின் விமான, நிலையம் இம்பாஸிபிள் புட் நிறுவனம், பீயாண்ட மீட் உணவு நிறுவனம், ஜான் கர்லிங் என்ற செயற்பாட்டாளர் ஆகியோருக்கு இந்த விருதுகள் அளிக்கப்பட்டு இருக்கிறது.

முதல் காரணம்

முதல் காரணம்

இரண்டு காரணங்களுக்காக மோடிக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோடி சோலார் பவர் திட்டங்களை அதிகம் செயல்படுத்தியதற்காகவும், இதனால் பெருமளவில் மாசு குறைந்துள்ளது என்றும் கூறி, இந்த பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

காரணம் இரண்டு

காரணம் இரண்டு

இரண்டாவதாக, பிரதமர் மோடி 2022க்குள் பிளாஸ்டிக் குப்பைகளை நீக்குவதாக உறுதி மொழி ஏற்று இருப்பதையும் பாராட்டி இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக விருது அளிக்கப்பட்டு இருக்கிறது.

English summary
Modi gets UNO's Champions of the Earth 2018 award
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X