For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடியும் கோட்சேவும் ஒரே தத்துவத்தை நம்புகிறவர்கள்...கேரளா சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

வயநாடு: பிரதமர் மோடியும் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவும் ஒரே தத்துவத்தை நம்புகிறவர்கள் என கேரளாவில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

வயநாட்டில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

Modi, Godse believe in the same ideology, says Rahul Gandhi

மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கும் பிரதமர் மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கோட்சேவை தாம் நம்புவதாக சொல்வதற்கான திராணி பிரதமர் மோடியிடம் இல்லை.

வேலைவாய்ப்பின்மை குறித்து நீங்கள் எப்போது கேள்வி எழுப்பினாலும் அதை நரேந்திர மோடி உடனே திசைதிருப்பி விடுவார். என்.ஆர்.சியும் சி.ஏ.ஏ.வும் நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரப்போவது இல்லை.

இந்தியர்கள் தாங்கள் இந்தியர்கள்தான் என்பதை நிரூபிக்க வேண்டுமாம். நான் இந்தியர் என்பதை தீர்மானிக்க நரேந்திர மோடி யார்?

தேசபக்தி கொண்டவர் என சொல்லிக்கொள்ளப்படும் இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன்தேசபக்தி கொண்டவர் என சொல்லிக்கொள்ளப்படும் இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன்

நான் இந்தியனா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை நரேந்திர மோடிக்கு கொடுத்தது யார்? நான் இந்தியன் என்பது எனக்கும் தெரியும். வேறு யார் ஒருவரிடமும் நான் இந்தியன் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

English summary
Former Congress president Rahul Gandhi said that Prime Minister Narendra Modi and Godse believed in the same ideology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X