For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி நல்லவர்தான்.. ஆனால் பாஜக தனது 'கலரை' மாற்ற வேண்டும்- ஜெகன் மோகன்

Google Oneindia Tamil News

Modi a good administrator, but he should make BJP 'secular': Jagan Mohan Reddy
ஹைதராபாத்: நரேந்திர மோடி நல்ல திறமையான நிர்வாகி என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் பாஜக மதச்சார்பற்ற கட்சியாக மாற வேண்டியது அவசியம் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலப் பிரிவினைக்கு எதிராக நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் ரெட்டி. இந்த நிலையில், மோடி குறித்து அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது கட்சியின் மீது படிந்துள்ள மதவாத சாயத்தைப் போக்குவார் என்று நம்புகிறேன்.

மோடி நல்ல நிர்வாகி. ஆனால் பாஜகவின் நிறம் மாற வேண்டும். அக்கட்சி மதச்சார்பற்ற கட்சியாக மாற வேண்டும்.

ஒருவர் குறிப்பிட்ட மதத்தில் பிறந்தவர் என்பதால் அவரை புறக்கணிப்பதிலும், பாரபட்சமாக பார்ப்பதும் நியாயமற்றது. இப்படிப்பட்ட போக்கால்தான் உள்நாட்டுத் தீவிரவாதம் உருவாகிறது. இந்த நிலை மாற வேண்டும். நரேந்திர மோடி இதை மாற்றுவார் என்று நம்புகிறேன். பாஜகவும் மாற வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் மதச்சார்பற்றதாக மாற வேண்டும் என்றார் ரெட்டி.

மேலும் அவர் கூறுகையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சிறந்த நிர்வாகி என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை. அவர் ஒரு நல்ல நிர்வாகி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து தேவையில்லை என்றார் ரெட்டி.

English summary
Jagan Mohan Reddy, who began an indefinite fast yesterday to protest against the Centre's decision to bifurcate Andhra Pradesh, has said that he hopes the BJP's prime ministerial candidate Narendra Modi is able to give the party a 'secular' tag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X