For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ 640 கோடி நஷ்டஈடு கேட்டு நெஸ்லே மீது தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: பாதுகாப்பற்ற உணவுப் பொருளான மேகியை முறையற்ற வகையில் விற்பனை செய்ததற்காக 'நெஸ்லே இந்தியா' நிறுவனம் ரூ 640 கோடியை இழப்பீடாக தரவேண்டும் என்று மத்திய அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் மேகி நூடுல்ஸ் மீதான தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது

நெஸ்ட்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் இருப்பதை உத்தர பிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்தது. இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக காரீயம் இருந்ததால், நெஸ்லே நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மேகி நூடூல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டது.

Modi Govt will continue to pursue Rs 640-cr Maggi suit

இந்த தடையை எதிர்த்து அந்நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன்பின்னர், அரசு அங்கீகரித்த ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், மேகி நூடூல்ஸில் எவ்வித நச்சுப் பொருளும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து மேகி நூடூல்ஸ் மீதான தடையை மும்பை உயர்நீதிமன்றம் நீக்கியது.

இந்த தடையை எதிர்த்து இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பில் பல தவறுகள் உள்ளன. மேலும், மேகி நிறுவனம் அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பிவைத்த மாதிரி மேகி நூடூல்ஸ்களில் நம்பகதன்மை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீடு வழக்கு இம்மாதம் 30ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மேகி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடரும் என தெரிகிறது. .இந்நிலையில் அண்மையில் கோர்ட் நிபந்தனையின் படி நெஸ்லே நிறுவனம் மீண்டும் விற்பனையை துவக்கியது,

English summary
Government will continue to pursue its Rs 640-crore class action suit filed in NCDRC against Nestle India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X