For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீர்மானத்தை எளிதாக முறியடித்த மோடி அரசு.. பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா?

நம்பிக்கை வாக்கெடுப்பில் 325 வாக்குகளை பெற்று மோடி அரசு வெற்றி பெற்றது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 325 வாக்குகளை பெற்று மோடி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி சீனிவாஸ் கேசினேனி கொண்டு வந்தார். அதன் மீது இன்று காலையில் விவாதம் நடைபெற்றது.

Modi govt wins vote of confidence by 325 votes vs 126 votes

அந்த விவாதத்தின் மீது ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பிரதமர் நரேந்திர மோடி பதில் உரையாற்றினார். இதையடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

குரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்த நிலையில் மின்னணு முறையில் வாக்கு பதிவு நடந்தது. இதில் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் என 451 வாக்குகள் பதிவாகின. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

மக்களவையில் பாஜகவுக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான அளவில் உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து அவையை வரும் திங்கள்கிழமைக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.

English summary
PM Modi government wins vote of confidence by 325 votes Vs 126 votes by opposition. Total number of votes are 451.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X