For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்குத் தெரியாமல் மல்லையா தப்பியிருக்க முடியாது.. ராகுல் காந்தி பகிரங்க புகார்!

By Sudha
Google Oneindia Tamil News

டெல்லி: விஜய் மல்லையா நாட்டை விட்டுத் தப்பிப் போக முக்கியக் காரணமே பிரதமர் நரேந்திர மோடிதான். அவர்தான் மல்லையா தப்பிச் சென்றதன் பின்னணியில் உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. மாறாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டுதான் போயுள்ளார் என்பது கிட்டத்தட்ட அம்பலமாகி விட்டது. பாஜக தரப்பில் அருண் ஜேட்லிக்கும், ஸ்டேட் பாங்குக்கும் மல்லையா லண்டன் போகப் போவது தெரிந்திருக்கிறது. ஆனால் வாயை திறக்கவில்லை, மாறாக கமுக்கமாக இருந்துள்ளனர் என்பதை வெளிச்சமிட்டு விட்டது மல்லையாவின் பேட்டி.

Modi is behind Mallya escape, says Rahul Gandhi

இந்த விவகாரத்தில் தற்போது பிரதமர் மோடியை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி. விஜய் மல்லையாவின் மாபெரும் எஸ்கேப்பின் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பதாக கூறியுள்ளார் ராகுல் காந்தி. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில், சிபிஐ மல்லையாவுக்கு உதவியுள்ளது. அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கண்டவுடன் கைது என்ற உத்தரவை, "தெரிந்தால் தகவல் தெரிவிக்கவும்" என்று மாற்றியுள்ளது சிபிஐ. சிபிஐ நேரடியாக பிரதமருக்குத்தான் ரிப்போர்ட் செய்கிறது. எனவே இதுபோன்ற முக்கிய முடிவை எடுக்கும்போது பிரதமருக்குத் தெரிவிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. அதுவும் சர்ச்சையான வழக்கில் நிச்சயம் பிரதமருக்கு தெரிவித்திருப்பார்கள். எனவே மல்லையாவுக்கு எதிரான நோட்டீஸில் செய்த மாற்றம் பிரதமருக்குத் தெரியாமல் இருக்காது என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி கூறும் குற்றச்சாட்டும் சரியானதே. மல்லையாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸில் மாற்றம் செய்ததை சிபிஐயும் ஒப்புக் கொண்டுள்ளது. விஜய் மல்லையா தப்புவார் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதால் அந்த மாற்றத்தை செய்ததாக சிபிஐ கூறியுள்ளது.

மல்லையாவுக்கு எதிராக 2015ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸில் நவம்பர் 24ம் தேதி மாற்றம் செய்து விட்டனர். இதுதான் மல்லையாவுக்கு வசதியாகப் போய் விட்டது. டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் மல்லையாவிடம் விசாரணை நடத்தியிருந்தது சிபிஐ. ஆனால் அதன் பின்னர் சிபிஐ நோட்டீஸின் ஓட்டையை வைத்து தப்பி விட்டார் மல்லையா.

பிரதமரை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி. பாஜக தரப்பும், பிரதமர் அலுவலகமும் என்ன விளக்கம் அளிக்கவுள்ளது என்பது தெரியவில்லை.

English summary
Congress president Rahul Gandhi has charged that PM Modi is behind Mallya's Great escape.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X