For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக அரசியல் ஆட்டத்தின் முக்கிய நாயகனே மோடிதான்... மாஜி முதல்வர் சரமாரி தாக்கு!

கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்த அரசியல் ஆட்டத்தின் முக்கிய நாயகனே மோடிதான் என முன்னாள் முதல்வர் சித்தராமையா சரமாரியாக தாக்கியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு எதிர்த்து சட்டசபை வளாகத்தில் சித்தராமையா தர்ணா

    பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்த அரசியல் ஆட்டத்தின் முக்கிய நாயகனே மோடிதான் என முன்னாள் முதல்வர் சித்தராமையா சரமாரியாக தாக்கியுள்ளார்.

    கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றார். பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாத நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலா எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்துள்ளார்.

    இதனை கண்டித்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் கர்நாடக சட்டசபை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முதல்வர் எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் 5 பேர் இன்று பதவியேற்பார்கள் என கூறப்பட்டது.

    பதவியேற்பு விழா

    பதவியேற்பு விழா

    ஆனால் எடியூரப்பா மட்டுமே பதவியேற்றார். அதேபோல் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை.

    சித்தராமையா பேட்டி

    சித்தராமையா பேட்டி

    இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வரான சித்தராமையா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது மோடி ஏன் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

    ஆட்டத்தின் முக்கிய நாயகன்

    ஆட்டத்தின் முக்கிய நாயகன்

    அதற்கு சித்தராமையா அளித்த பதில், மோடிதான் இந்த ஆட்டத்தின் முக்கிய நாயகன். கர்நாடகாவில் நடக்கும் அரசியல் ஆட்டத்திற்கு பின்னால் இருப்பது மோடி தான்.

    பெரும்பான்மை உள்ளது

    பெரும்பான்மை உள்ளது

    பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான எம்எல்ஏக்கள் இல்லை. நாங்கள் ஒன்றும் பாதுகாப்பற்றவர்கள் அல்ல. காங்கிரஸ், ஜேடிஎஸ் பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உள்ளது.

    118 எம்எல்ஏக்கள் உள்ளனர்

    118 எம்எல்ஏக்கள் உள்ளனர்

    ஆனால் பாஜகவுக்கு போதுமான பெரும்பான்மை இல்லை. ஆளுநரின் முடிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார். 118 எம்எல்ஏக்களும் விதன் சவுதாவில் இருப்பதாகவும் சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.

    English summary
    Former Karnataka CM Siddaramaiah accussed that Modi is the main guy, He is behind all these games.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X