For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் தாயைக் கூட விட்டு வைக்கவில்லை.. காங்கிரஸ் முன்வைத்த விமர்சனங்களை பட்டியலிட்டு மோடி வேதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜீவ் காந்தி குறித்து மோடி விமர்சித்ததில் தவறில்லை: தேர்தல் ஆணையம் அதிரடி!- வீடியோ

    குருஷேத்திரம்: என் தாயைக் கூட விட்டு வைக்காமல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது என பிரதமர் வேதனை தெரிவித்தார்.

    நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரசாரம் வெயிலை காட்டிலும் சூடுபிடித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஊழலில் முதல் இடம் பிடித்தவர் என மோடி கடுமையாக சாடினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கள்கிழமை பேசுகையில் எனது தந்தையை அவமதித்தாலும் கூட நான் மோடி மீது அன்பும் அரவணைப்பும் கொண்டுள்ளேன் என்றார்.

    அப்பாவை பற்றி பேசுவது இருக்கட்டும்.. முடிந்தால் இதை பேசுங்கள்.. மோடிக்கு பிரியங்கா சவால்! அப்பாவை பற்றி பேசுவது இருக்கட்டும்.. முடிந்தால் இதை பேசுங்கள்.. மோடிக்கு பிரியங்கா சவால்!

    தவறான வார்த்தை

    தவறான வார்த்தை

    இதற்கு பதிலடி தரும் வகையில் ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் பாஜக பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சி தனது அன்பு அகராதியில் இருந்து என்னை நோக்கி தவறான வார்த்தைகளை வீசி வருகிறது.

    பத்மாசூரன்

    பத்மாசூரன்

    அக்கட்சி என்னை ஹிட்லர், தாவூர் இப்ராஹிம், முசோலினி போன்றோருடன் ஒப்பிட்டு பேசியது. இவ்வளவு ஏன் காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை புழு பூச்சியுடன் கூட ஒப்பிட்டு பேசியிருந்தார். இன்னொருவர் என்னை பத்மாசூரன் என குறிப்பிட்டார்.

    நினைவில் கொள்ளுங்கள்

    நினைவில் கொள்ளுங்கள்

    எனது தாயைக் கூட விட்டு வைக்காமல் அவதூறான வார்த்தையை சொன்னார்கள். எனது தந்தை யார் என கேட்டனர். இதெல்லாம் நான் பிரதமர் ஆன பிறகு சொன்னதுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    மீண்டும் மோடி அரசு

    மீண்டும் மோடி அரசு

    தற்போது நிலைமை தெளிவாகிவிட்டது. மே 23-ஆம் தேதி மாலை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. உங்கள் ஆசிகளுடன் மீண்டும் மோடி அரசுதான் வரப் போகிறது என்றார் மோடி.

    English summary
    Modi listed out what are the abusive words used by Congress after he becomes Prime Minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X