For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசோக் சிங்கால் உடல் தகனம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் மறைந்த அசோக் சிங்கால் உடலுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் 89 வயதான அசோக் சிங்காலுக்கு கடந்த 14-ந் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

Modi pays homage to Ashok Singhal at RSS office

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 2.24 மணிக்கு அசோக் சிங்கால் உயிர் பிரிந்தது. பின்னர் அசோக் சிங்கால் உடல் டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அசோக் சிங்காலின் உடலுக்கு இன்று பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்யவர்தன் ரத்தோர் மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

English summary
PM Modi on Wednesday paid tribute to former Vishwa Hindu Parishad (VHP) president Ashok Singhal at RSS office in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X