For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலாம் மறைவுக்கு ஹமீத் அன்சாரி, மோடி இரங்கல்.. நாடே சோகத்தில் ஆழ்ந்தது

Google Oneindia Tamil News

டெல்லி : அப்துல் கலாம் மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அப்துல் கலாம் காலமானார்.

அவரது மறைவு செய்து அறிந்த ஒட்டு மொத்த இந்தியாவே அதிர்ந்துள்ளது.

Modi, Rajnath Singh and other leaders condoles Abdul Kalam's death.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி நாட்டின் அனைத்து பகுதிக்கும் சொந்தக்காரர் கலாம் என்றும், அவர் ஒரு தொழில் நுட்ப ஆளுமைத் திறன் மிக்கவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதே போன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இளைஞர்களை வழி நடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் சிங் ராஜ்நாத் சிங் தனது இரங்கல் செய்தியில், கலாம் காலமானது மிகவும் துக்கமான செய்தி என்றும், அவர் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தவர் எனவும் கூறியுள்ளார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் ராஜ்நாத் கூறியுள்ளார்.

இதே போன்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கட்சிகளைக் கடந்து அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் திரையுலகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், சமூக வலைதளங்களில் அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது புகழை பதிவு செய்து வருகின்றனர்.

English summary
Prime Minister Narendra Modi, Union Home Minister Rajnath Singh and other leaders condoles former President APJ Abdul Kalam's death
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X