For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இத்தனை லட்சமா? மோடியின் அந்த பிரபல ஃபிட்னஸ் வீடியோவை எடுக்க எவ்வளவு செலவானது தெரியுமா?

பிரதமர் மோடியின் பிட்னஸ் சேலஞ்ச் வீடியோவை உருவாக்க மொத்தம் ரூ. 35 லட்சம் பணம் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்ட மோடி-வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடியின் பிட்னஸ் சேலஞ்ச் வீடியோவை உருவாக்க மொத்தம் ரூ.35 லட்சம் பணம் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஃபிட் இந்தியா என்பது மோடி தொடங்கி வைத்த இயக்கம். மான் கீ பாத் நிகழ்ச்சிக்காக வானொலியில் பேசும்போது ஃபிட் இந்தியா குறித்தும் பேசினார் மோடி. இதற்கு அடுத்த இந்த ஃபிட் இந்தியா சேலஞ்ச் வைரல் ஆனது.

    இதையடுத்து கோஹ்லி, இந்த சேலஞ்ச்சை ஏற்பதாக கூறி உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். மேலும் பிரதமர் மோடியும் இதை ஏற்க வேண்டும் என்றார். அதையடுத்து மோடி உடற்பயிற்சி செய்து வெளியிட்ட வீடியோ பெரிய வைரல் ஆனது.

    யோகா தின செலவு

    யோகா தின செலவு

    இந்த பிட்னஸ் வீடியோ வெளியான சில நாளில் யோகா தினம் வந்தது. இந்த யோகா தினத்தில், எல்லோருக்கும் எஸ்எம்எஸ் அனுப்ப ரூ.16 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. மோடி யோகா செய்வது போல அனிமேஷன் கார்டூன் உருவாக்க ரூ. 45 லட்சமும் டெல்லியில் யோகா தினத்தன்று ஆடை, பேண்ட், விளம்பரம் என்று ரூ.25 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் மற்ற மாநிலங்களில் நடந்த யோகா தின கொண்டாட்டம் கணக்கு கிடையாது.

    மூன்று நாட்கள்

    மூன்று நாட்கள்

    பிரதமர் மோடி கோஹ்லியின் பிட்னஸ் சவாலை ஏற்றுக்கொண்டு வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ ஒரே நாளில் எடுக்கப்பட்டது கிடையாது. இதற்காக மூன்று நாள் செலவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இரண்டு நாட்கள் எடிட் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாலிவுட்டில் புகைப்பட கலைஞர் வரவழைக்கப்பட்டுள்ளார்.

     செலவு எவ்வளவு

    செலவு எவ்வளவு

    இந்த வீடியோவை எடுக்க மொத்தம் 35 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் எடுத்த காரணத்தால் இவ்வளவு செலவு ஆகியுள்ளது. ஒரு நாளுக்கு 12 லட்சம் வரை இந்த வீடியோவை செலவு செய்து எடுத்துள்ளனர். இந்த வீடியோதான் உலகம் முழுக்க வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

    யார் பணம்

    யார் பணம்

    இந்த பணம் முழுக்க முழுக்க மக்களுடையது என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி இப்போதே சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேச தொடங்கிவிட்டது. ஆனால் பாஜக இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது, இது மக்கள் பணம் அல்ல, ஸ்பான்சர் கொடுத்த பணம் என்று விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அந்த ஸ்பான்சர் யார் என்று தகவல் வெளியாகவில்லை. '

    English summary
    Modi's fitness challenge Video: Government spent Rs.35 lakhs on this viral content as per source.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X