For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்.குக்கு பாஜக பதிலடி.. அதே ஹவாலா மன்னனுடன் அஸார் இருக்கும் படத்தை வெளியிட்டது!

Google Oneindia Tamil News

டெல்லி: மோடியுடன் ஹவாலாவில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தொடர்பு உள்ளதாக கூறி புகைப்படத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு உடனடியாக பாஜகவும் பதிலடியாக ஒரு படத்தை வெளியிட்டுள்ளது.

இதில் காங்கிரஸ் எம்.பியும், தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவருமான முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன், அதே ஹவாலா மோசடி மன்னன் அஃப்ரோஸ் பட்டாவுடன் இருப்பது போன்ற படத்தை பாஜக எம்.எல்.ஏ. ஹர்ஷ் சங்கவி வெளியிட்டுள்ளார்.

டிவிட்டரில் இந்தப் படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான பிரசார மோதல் மேலும் சூடாகியுள்ளது.

பட்டாவை வைத்து புயல் கிளப்பிய காங்.

பட்டாவை வைத்து புயல் கிளப்பிய காங்.

நரேந்திர மோடிக்கும் ஹவாலா மோசடி மன்னன் அஃப்ரோஸ் பட்டாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறி புகைப்பட ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

மோடி புகாருக்குப் பதிலடி

மோடி புகாருக்குப் பதிலடி

அண்மையில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் ஹவாலா மோசடி கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடிக்கும் விதமாக நரேந்திர மோடிக்கும் ஹவாலா மோசடி மன்னன் அஃப்ரோஸ் பட்டாவுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்று கூறியுள்ள காங்கிரஸ் அதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

காங். புகாருக்கு அதே பட்டா மூலம் பாஜக பதிலடி

காங். புகாருக்கு அதே பட்டா மூலம் பாஜக பதிலடி

தற்போது அதே பட்டாவுடன் அஸாருதீன் இருக்கும் படத்தை டிவிட் செய்துள்ளார் ஹர்ஷ் சங்கவி.

அமீத் ஷாவும் வெளியிட்டார்

அமீத் ஷாவும் வெளியிட்டார்

அதேபோல அமீத் ஷாவும் இந்தப் படத்தை வெளியிட்டார். ஆனால் பின்னர் அதை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கி விட்டார்.

பயங்கரமான ஹவாலா மன்னன்

பயங்கரமான ஹவாலா மன்னன்

சம்பந்தப்பட்ட ஹவாலா மன்னனான அஃப்ரோஸ் பட்டா மிகப் பயங்கரமான ஹவாலா மோசடிக்காரர் ஆவார். இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் மார்ச் 22ம் தேதி மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அப்போது ரூ. 700 கோடி மதிப்பிலான ஹவாலா பண மோசடி நடந்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இவரை மோடி காக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன என்பது நினைவிருக்கலாம்.

English summary
Hawala scam is the current hot topic in Indian politics with both the national parties, Congress and BJP, engaged in war of words over their links with Hawala 'kingpins'. On Monday Congress targetted BJP by accusing Narendra Modi to be involved in Hawala scam and the BJP retorted immediately. BJP MLA Harsh R Sanghavi tweeted a picture of Congress MP Azharuddin posing with 'hawala kingpin' Afroz Phatta. Another BJP leader Amit Shah also tweeted the picture, which was removed later.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X