For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரிகிறது பிரதமா் மோடி செல்வாக்கு... கருத்துக் கணிப்பில் புதிய தகவல்...

Google Oneindia Tamil News

டெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவால் பிரதமா் நரேந்திர மோடியின் செல்வாக்கு.சாிவைடந்து வருவதாக தனியார் நிறுவனம் கருத்துக் கணிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் செயல்பாடுகள், அமைச்சா்களின் திறமை குறித்து அண்மையில் தனியாா் நிறுவனம் கருத்துக் கணிப்பை நடத்தியது.

Modi's popularity comes down by land bill

இதில் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று 78 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவால் நரேந்திரமோடியின் புகழ் சீர்குலைந்து வருவதாகவும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் எதிரானது என்றும் கருத்துக் கணிப்பில் மக்கள் கூறியுள்ளனர்.

மோடி அரசு பற்றிய கருத்துக் கணிப்பில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக 56 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 31 சதவீதம் பேர் அவரது செயல்பாடு சராசரியாக இருப்பதாகவும், 13 சதவீதம் பேர் மோசமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

சிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்களில் ராஜ்நாத்சிங் 2 ம் இடத்திலும், அருண் ஜேட்லி 3 ம் இடத்திலும் உள்ளனர்.

English summary
Modi's popularity comes down by land bill through public polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X