For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி பிரதமராக உ.பி.யில் அமோக ஆதரவு! 2வது இடத்தில் முலாயம்- இந்தியா டுடே சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக அமோக ஆதரவு இருப்பதாகவும் அவருக்கு அடுத்ததாக முலாயம்சிங்குக்கு கூடுதல் ஆதரவு இருக்கிறது என்றும் இந்தியா டுடே - சிவோட்டர் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளில் காங்கிரஸ்- பகுஜன் சமாஜ் இணைந்து தேர்தலை சந்தித்தால் 39 இடங்கள் வரை கிடைக்கும் என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு. ஆனால் தனித்து நின்றால் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடம்தான் கிடைக்குமாம்..

அதேபோல் யார் பிரதமர் என்ற கேள்விக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கே அமோக ஆதரவு தெரிவித்திருக்கின்றராம் உ..பி. வாக்காளர்கள். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது முலாயம்சிங் யாதவ்

மோடிக்கு 48%

மோடிக்கு 48%

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என 48% பேர் தெரிவித்துள்ளனர்.

முலாயம்சிங்குக்கு 19%

முலாயம்சிங்குக்கு 19%

அவருக்கு அடுத்ததாக சமாஜ்வாடி கட்சித் தலைவரும் நானே அடுத்த பிரதமர் என்றும் கூறிவருகிற முலாயம்சிங் யாதவ்தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என 19% பேர் கூறியுள்ளனர்.

ராகுலுக்கு 15%

ராகுலுக்கு 15%

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என 15% ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாயாவதிக்கு 12%

மாயாவதிக்கு 12%

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என 12% ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறுகிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு.

English summary
Narendra Modi has the highest popularity ratings across all regions of Uttar Pradesh in India Today- C Voter survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X