For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுதந்திர தின உரை... நேருவுக்கு பிறகு அதிக நேரம் பேசியவர் மோடிதான்...

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: சுதந்திர தின உரையில் 80 நிமிடங்கள் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

நாட்டின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதில் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

Modis speech duration in Independence day

அவர் சுமார் 80 நிமிடங்கள் உரையாற்றினார். இதுவரை பிரதமர்கள் ஆற்றிய உரைகளில் நீளமானது மற்றும் குறுகிய கால அளவு கொண்டதையும் பார்ப்போம்.

  • 1947- இல் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 72 நிமிடங்கள் கொண்ட நீண்ட உரையை ஆற்றினார். இந்த உரைதான் கடந்த 2015-ஆம் ஆண்டு வரை மிக நீண்ட உரையாக இருந்தது. அதை 86 நிமிடங்களாக பேசி சாதனை செய்தார் மோடி.
  • 2002-இல் பிரதமராக இருந்த வாஜ்பாய் 30 நிமிடங்களில் தனது சுதந்திர தின உரையை வாசித்தார்.
  • 2005-இல் பிரதமராக பொறுப்பேற்ற மன்மோகன் சிங், 50 நிமிட உரையை நிகழ்த்தினார்.
  • 2014-இல் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட போது முதல் 65 நிமிடம் உரையாற்றினார்.
  • 2015-ஆம் ஆண்டு வரை மிக நீண்ட உரையாக இருந்தது. அதை 86 நிமிடங்களாக பேசி சாதனை செய்தார் மோடி.
  • 2018-ஆம் ஆண்டு மோடி ஆற்றிய சுதந்திர தின உரை 80 நிமிடங்கள் ஆகும். நேருவுக்கு பிறகு இதுவரை எந்த பிரதமரும் இந்த அளவுக்கு பேசியதில்லை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
  • கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆற்றிய சுதந்திர தின உரைகளில் கடந்த ஆண்டு 57 நிமிடங்கள் பேசியதே மிகவும் குறைவான கால அளவாகும்.
  • கடந்த 2016-ஆம் ஆண்டு 96 நிமிடங்களில் அவர் ஆற்றிய உரைதான் சுதந்திர தினத்தில் பிரதமர்கள் ஆற்றிய உரைகளில் நீளமானதாகும்.
  • சுதந்திர தினத்துக்கு முந்தைய மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சியில் சுதந்திர தினத்தன்று தனது உரை மிகவும் நீளமாக இருப்பதாக கடிதங்கள் வந்துள்ளதால் இனி குறுகிய உரைகளை அளிக்கவுள்ளேன் என்றார் மோடி.
  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 10 ஆண்டு காலத்தில் அவர் ஆற்றிய சுதந்திர தின உரைகளுள் 50 நிமிடங்கள் ஆற்றியதே நீளமானதாகும்.
English summary
PM Narendra Modi beats his achievement in delivering Independence day speech in the category of duration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X