For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ வீரர்களுக்கு தன் கையால் ஸ்வீட் ஊட்டி விட்ட மோடி.. கேதார்நாத்தில் தீபாவளி!

Google Oneindia Tamil News

Recommended Video

    கேதார்நாத்தில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

    கேதார்நாத், உத்தரகாண்ட்: பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்துக்குச் சென்றுள்ளார். அங்கு ராணுவ வீரர்களுடன் இணைந்து இன்று அவர் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

    2014ம் ஆண்டு பிரதமரான பிறகு ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார் பிரதமர் மோடி. 2014ம் ஆண்டு அவர் சியாச்சின் மலைச் சிகரத்திற்குச் சென்று அங்கு தீபாவளியை படையினருடன் கொண்டாடினார். 2015ம் ஆண்டு பஞ்சாப் எல்லையில் தீபாவளியைக் கொண்டாடினார் பிரதமர் மோடி.இந்தியா - பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டையொட்டி பஞ்சாப் எல்லைக்கு அவர் சென்றிருந்தார்.

    2016ம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்திற்கு விஜயம் செய்த பிரதமர் மோடி அங்கு இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் படையினருடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினார் மோடி. 2017ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடினார் பிரதமர் மோடி என்பது நினைவிருக்கலாம்.

    12,00 அடி உயர கேதார்நாத்

    கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில் கேதார்நாத் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. அங்குள்ள சிவன் கோவிலுக்கு இன்று காலை விஜயம் செய்தார் பிரதமர் மோடி. அங்கு அவர் வழிபாடு நடத்தினார்.

    பனி சூழ் குகையில் தியானம்

    இதையடுத்து அருகில் உள்ள பனி சூழ்ந்த குகைக்குச் சென்ற அவர் அங்கு தியானம் செய்தார். அங்கு பக்தர்கள் வந்து தியானம் செய்வது வழக்கம். தியானத்தை முடித்துக் கொண்ட பின்னர் அவர் அங்கிருந்து ராணுவ முகாமுக்குப் புறப்பட்டார்.

    ராணுவத்தினருடன் சந்திப்பு

    இதைத் தொடர்ந்து அவர் ராணுவ முகாமுக்குச் சென்று அங்கு ராணுவ வீரர்களைச் சந்தித்தார். 5000க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு பிரதமருக்காக கூடியிருந்தனர். அவர்களிடையே பிரதமர் பேசினார். தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.+

    ஸ்வீட் ஊட்டி விட்டார்

    ஸ்வீட் ஊட்டி விட்டார்

    பேசி முடித்த பிறகு ராணுவத்தினருக்கு தன் கையால் ஸ்வீட் எடுத்து ஊட்டி விட்டார் பிரதமர் மோடி. இதைப் பார்த்து ராணுவத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    English summary
    PM Modi has been visitind Kedarnath for celebrating Diwali with armed forces.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X