For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரயாக்ராஜில் துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவிய மோடி… குவியும் பாராட்டுகள்

Google Oneindia Tamil News

பிரயாக்ராஜ்:பிரயாக்ராஜில் துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை செலுத்திய சம்பவம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பிரயாக்ராஜ் சென்று கும்பமேளாவில் புனித நீராடி வழிபாடு செய்தார்.

Modi washes feet of sanitation workers at kumbh, performs ganga arti

சங்கம் படித்துறையில் மகா ஆரத்தி வழிபாடு செய்து இந்திய மக்கள் நலனுக்காக பிரதமர் மோடி வேண்டினார். இதனையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.


கும்பமேளா இடத்தை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியின் இந்த செயல்பாடுகள் பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக, பிரதமர் மோடி தொடங்கி வைத்த விவசாயிகளுக்ககான ரூ.6,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட 14 மாநிலங்களை சேர்ந்த 1 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகை அளிக்கப்படும். 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மேலும் 1 கோடி விவசாயிகளுக்கு, 2 அல்லது 3 நாள்களில், முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படும்.

English summary
Modi Washes Feet of Sanitation Workers At Kumbh, Performs Ganga Arti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X