For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் மிகப்பெரிய காப்பீடு திட்டம் என்கிறார்களே.. அரசுக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிப்பு - வீடியோ

    டெல்லி: உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீடு திட்டம் என்ற அடைமொழியோடு நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    10 கோடி குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீடு திட்டத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்தார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.

    இதற்கான நிதி ஆதாரம் எப்படி திரட்டப்படும் என்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

    ரூ.11,000 கோடி

    ரூ.11,000 கோடி

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு, ரூ.110 பில்லியன் தேவைப்படும் என கூறியுள்ளார். அதாவது ரூ.11,000 கோடி. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு 20 பில்லியன் ரூபாய்களை இதற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. எஞ்சிய பணம் திட்டம் அறிமுகமான பிறகு ஒதுக்கப்படும் என அதிகாரி கூறியுள்ளார்.

    மாநில அரசிடம் கேட்பார்களாம்

    மாநில அரசிடம் கேட்பார்களாம்

    மொத்த நிதியில் 70 பில்லியன் ரூபாயை மத்திய அரசும், எஞ்சிய தொகையை மாநில அரசுகளிடமிருந்தும் பெற்று இந்த காப்பீடு திட்டத்தை செயல்படுத்த போவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    திட்ட நடைமுறை

    திட்ட நடைமுறை

    இந்த திட்டம் கேஷ்லெஸ் முறையில் செயல்படுகிறதா அல்லது பணத்தை செலுத்திவிட்டு அரசிடமிருந்து திரும்ப பெறும் (reimbursement) வகையிலா என்பது பின்னர் தெரிய வரும்.

    மருத்துவ கல்லூரிகள்

    மருத்துவ கல்லூரிகள்

    நாடு முழுக்க 24 புது மருத்துவ கல்லூரிகளை திறக்க உள்ளதாகவும், ஏற்கனவே உள்ள மாவட்ட மருத்துவமனைகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும் பட்ஜெட்டில் அரசு தெரிவித்துள்ளது.

    English summary
    'Modicare' to cost about Rs. 11,000 crore a year Prime Minister Narendra Modi's plan to provide health insurance for about half the country's population would require an estimated 110 billion rupees.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X