For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிஜி... காஷ்மீருக்கு கண்சிகிச்சை வல்லுநர்களை அனுப்புங்க... ஒமர் அப்துல்லா வேண்டுகோள்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கணிசிகிச்சை வல்லுநர்களை பிரதமர் மோடி அனுப்ப வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் வன்முறையில் பலியாகி உள்ளனர்.

Modiji, send eye specialists to Kashmir, says Omar Abdullah

200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களில் 100 பேர் போலீசார். காயம் அடைந்தவர்களுக்கு ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 19 பேருக்கு கண் பார்வை பறிபோய்விட்டது. பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் இதுதொடர்பாக ஆலோசித்து வருகிறார்.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், கேரளாவில் வெடிவிபத்து ஏற்பட்ட போது தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லுநர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. தற்போது காஷ்மீருக்கு கண்சிகிச்சை வல்லுநர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Former Jammu and Kashmir chief minister Omar Abdullah has been regularly tweeting about the current unrest in the Valley and taking on Opposition leaders including current CM Mehbooba Mufti and Prime Minister Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X