For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடும்பின் மர்ம உறுப்பை அதிசயச் செடி என விற்கும் ஆன்லைன் ஆசாமிகள்...ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஹத்தா ஜோடி செடி என்ற பெயரில் உடும்பின் மர்ம உறுப்பு ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக லண்டனைச் சேர்ந்த நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : வாழ்வில் நினைத்த வெற்றியை தேடித் தரும் அபூர்வ செடி என்று நம்பப்படும் ஹத்தா ஜோடிக்கு பதிலாக இந்தியாவில் இருந்து உடும்பின் மர்ம உறுப்பு ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

ஹத்தா ஜோடி என்பது ஒரு செடியின் வேர்ப்பகுதியாகும், வேரில் இருந்து வரும் இரண்டு கிளைகள் மனிதக் கைகள் போலவும் அவை வணங்குவது போலவும் இயற்கையாகவே அமைந்திருக்கும்.

இந்த அரிய வகை வேர் இந்தியாவிலேயே அதிகம் கிடைக்கிறது. இந்த வேரை வீட்டில் வைத்திருந்தால் சுபிட்சம் வரும் என்பதோடு வெற்றிகள் கைகூடும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் ஆன்லைன் விற்பனையிலும் ஹத்தா ஜோடி விற்பனை அமோகமாக நடக்கிறது.

உடும்பின் பாகங்கள்

உடும்பின் பாகங்கள்

ஆனால் அண்மையில் லண்டனைச் சேர்ந்த உலக விலங்குகள் பாதுகாப்பு(வேப்) மையம் மேற்கொண்ட ஆய்வில், ஹத்தா ஜோடி என்ற பெயரில் ஆன்லைனில் உடும்பின் பாகங்கள் விற்கப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டள்ளது. உண்மையில் அவை அந்த அரிய வகைச் செடிகள் அல்ல உடும்பின் மர்ம உறுப்பை காய வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

சட்டவிரோத விற்பனை

சட்டவிரோத விற்பனை

மேலும்இதன்படி செய்யப்பட்ட ஆய்வில் அமேசான் மட்டுமல்ல ஈபே, அலிபாபா, ஸ்நாப் டீல் உள்ளிட்ட இணையதளங்களும் சட்டவிரோதமான முறையில் உடும்பின் உடல் பாகங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது. ஹத்தா வகை வேரைப் போலவே இதுவும் அரிதான ஒன்று என்பதோடு பாதுகாக்கப்பட்ட உயிரினித்தின் உடல்பாகம் என்று வேப் கூறியுள்ளது.

அரிய வகை உடும்பு

அரிய வகை உடும்பு

இந்தியாவில் 4 வகையான உடும்புகள் உள்ளன, இந்திய வினவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972ன்படி இவை அனைத்துமே முதல் ரக அரிய வகை உயிரினங்கள் என்று கூறப்பட்டுள்ளது. உடும்பின் உடல்பாகங்களை விற்பனை செய்வது சட்டவிரோத நடவடிக்கை என்றும் வேப் சுட்டிகாட்டியுள்ளது.

அதிகாரிகள் சோதனை

அதிகாரிகள் சோதனை

இறந்த உடும்பின் பாகங்களோ அல்லது அவற்றை துன்புறுத்தியோ பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வேப் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

வடமாநிலங்களில் சோதனை

வடமாநிலங்களில் சோதனை

அண்மையில் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு மையமும், வனவிலங்கு குற்ற தடுப்பு புலானய்வு அமைப்பும் மேற்கொண்ட ஆய்வில் புபனேஸ்வரின் ஒரு வீட்டில் இருந்து சுமார் 210 ஹத்தா ஜோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆந்திரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அழியும் அபாயம்

அழியும் அபாயம்

இது ஒரு சாதாரண விஷயம் என்று விட்டுவிட்டால் உடும்பு இனமே அழியும் அபாயம் உள்ளது என்று வனஉயிரியல் பாதுகாவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் ஹத்தா ஜோடி என்ற இந்த உடும்பின் பாகங்கள் ஆன்லைனிலும் இந்தியாவில் உள்ள இந்து சமய கோவில்களை ஒட்டியுள்ள கடைகளிலும் கிடைப்பதாக வேப் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

English summary
India'sprotected species monitor lizards pennies sold as hatha jodi, a rare plant part believed to have magical properties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X