For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை கூடுகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்.. நிலுவையில் உள்ள 40 மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை கூடவுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களுக்கான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து 40 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

லோக்சபாவில் நிறைவேற்றம்

லோக்சபாவில் நிறைவேற்றம்

அவற்றில் 12 மசோதாக்கள் மட்டும் லோக் சபாவில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளது. லோக்பால், லோக் ஆயுக்தா மசோதா 2014ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இரு அவைகளிலும் பென்டிங்கில் உள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் மசோதா

நிலம் கையகப்படுத்துதல் மசோதா

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான திருத்தப்பட்ட மசோதா 2015 பிப்ரவரி 24ஆம் தேதி லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ராஜ்யசபாவில் பென்டிங்கில் உள்ளது. இதேபோல் திருநங்கைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இரு அவைகளிலும் நிலுவையில்தான் உள்ளது.

பொருளாதார இழப்பு

பொருளாதார இழப்பு

இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலை ராஜ்ய சபாவில் நிலுவையில் உள்ளது. பொருளாதார இழப்பை ஏற்படுத்தி தப்பியவர்கள் தொடர்பான மசோதா 2018ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இரு அவைகளும் அந்த மசோதாவும் பென்டிங்கில் தான் உள்ளது.

இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

இந்நிலையில் நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடவுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு லோக்சபா தலைவர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

English summary
stormy session of Parliament is set to begin Wednesday. Twelve of these bills have been passed by Lok Sabha but are stuck in Rajya Sabha. The rest haven’t even cleared the Lower House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X