For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த 3-4 நாட்களுக்கு மேற்கு கடலோர பகுதிகளில் கனமழை தொடரும்

அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு மேற்கு கடலோர பகுதிகளில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்த 2 அல்லது 3 நாட்களில் இந்தியா முழுவதும் மழைக்கு வாய்ப்பு

    டெல்லி: அரபிக் கடலோரம் உள்ள கடற்கரை பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்.

    தென்மேற்கு பருவமழை பரவலாக பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. இப்படி நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்தது.

    Monsoon updates: Heavy rains to continue along western coast, fishermen warned

    இதுகுறித்து இந்திய வானிலை மையம் தனது அறிக்கையில் கூறுகையில் வங்க கடலில் வடமேற்கு பகுதிகளில் மேலடுக்கு காற்று சுழற்சியின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸாவில் மழை பெய்து வருகிறது.

    அடுத்த 3 முதல் 4 நாட்களில் சத்தீஸ்கர், மத்திய இந்திய பகுதிகள், வடக்கு தீபகற்பம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். மத்திய அரபிக் கடலில் அடுத்த 3 முதல் 4 நாட்களில் அலைகளின் உயரம் எழும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

    கோவாவில் கடந்த வியாழக்கிழமை இரவு கனமழை பெய்தது. பனாஜியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

    English summary
    The rainfall has been particularly heavy along the Arabian sea coastline and the IMD said that it may continue pouring for next 3-4 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X