For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜில்லுனு ஒரு செய்தி : அடுத்த 2 அல்லது 3 நாட்களில் இந்தியா முழுவதும் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 2 அல்லது 3 நாட்களில் இந்தியா முழுவதும் மழைக்கு வாய்ப்புள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்த 2 அல்லது 3 நாட்களில் இந்தியா முழுவதும் மழைக்கு வாய்ப்பு

    டெல்லி: வடஇந்தியா நோக்கி வந்துள்ள தென்மேற்கு பருவமழை அடுத்த 2 அல்லது 3 நாட்களில் நாடு முழுவதும் மழை பெய்யக் கூடும்.

    இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மும்பையில் கடந்த சில தினங்களாக வெளுத்து வாங்கிய மழை பெய்தது.

    Monsoon updates: SW Monsoon to cover entire country over next 2-3 days

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் 30-ஆம் தேதி வரை டெல்லியில் பெய்யும். இதேபோல் ஒடிஸா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட, மகாராஷ்டிரம், குஜராத் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெய்யும்.

    அரபிக் கடல், குஜராத், ராஜஸ்தான் மற்றும் நாடு முழுவதும் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மழையை எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பருவமழை 1 வாரத்துக்கும் மேல் தாமதமாக தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு ஜூலை 12-ஆம் தேதிக்குள் இரு மாநிலங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும்.

    கடந்த பருவமழையைக் காட்டிலும் இந்த ஆண்டு நல்ல மழைப் பொழிவைத் தரும். ஜூன் மற்றும் செப்டம்பர் மாத காலகட்டத்தில் நாடு முழுவதும் 96 முதல் 104 சதவீதம் வரை மழை பெய்யும் என்று செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

    English summary
    The southwest monsoon is set to cover the entire country in the next two days, almost a fortnight ahead of what it would normally take, even as it reached northwest India, including Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X