For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக செல்வாக்கு சரிந்தது.. ஏபிபி அதிரடி சர்வே

பிரதமர் மோடியின் நான்கு வருட ஆட்சி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஏபிபி-சிஎஸ்டிஎஸ் தொலைக்காட்சி நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடியின் நான்கு வருட ஆட்சி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஏபிபி-சிஎஸ்டிஎஸ் தொலைக்காட்சி நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அடுத்து சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் பாஜக மிகவும் பின்தங்கியுள்ளது.

    பிரதமர் மோடியின் தலைமையிலான நான்கு வருட பாஜக ஆட்சி எப்படி இருந்தது என்று ஏபிபி-சிஎஸ்டிஎஸ் தொலைக்காட்சி சர்வே நடத்தி இருக்கிறது. ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    இந்த மாநிலங்களில் அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் அந்த மாநிலங்களுக்கு முக்கியம் தரப்பட்டது.

     ராஜஸ்தானில் நிலைமை

    ராஜஸ்தானில் நிலைமை

    பாஜக ஆளும் ராஜஸ்தானில், பாஜக கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் அடிவாங்க வாய்ப்புள்ளதாக சர்வே தெரிவித்துள்ளது. பாஜகவை விட காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அதிக ஆதரவு அளித்துள்ளனர். இங்கு உள்ள 200 தொகுதிகளில் மொத்தம் 44 சதவிகித தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், 39 சதவிகித தொகுதிகளில் மட்டும் பாஜக வெற்றி பெரும் என்றும் சர்வே தெரிவித்துள்ளது.

     மத்திய பிரதேசம் நிலைமை

    மத்திய பிரதேசம் நிலைமை

    அதேபோல் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும், பாஜக கட்சி அடுத்த சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக சர்வே தெரிவித்துள்ளது. பாஜகவை விட காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நிறைய பெற்ற ஆதரவு அளித்துள்ளனர். இங்கு உள்ள தொகுதிகளில் மொத்தம் 49 சதவிகித தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், 39 சதவிகித தொகுதிகளில் மட்டும் பாஜக வெற்றி பெரும் என்றும் சர்வே தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலும் இது பிரதிபலிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

     பீகாரில் மட்டும் பாஜக

    பீகாரில் மட்டும் பாஜக

    ஆனால் பீகாரில் மட்டும் பாஜக கொஞ்சம் முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் பாஜக 60 சதவிகித இடங்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மாறாக காங்கிரஸ் கூட்டணி 34 சதவிகித இடங்களை மட்டும் பெறும். மீதம் இருக்கும் கட்சிகள் இன்னும் 6 சதவிகித இடங்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

     காரணம் என்ன

    காரணம் என்ன

    இந்த பாஜகவின் பின்னடைவுக்கு காரணமும் சொல்லப்பட்டுள்ளது. பாஜகவின் பிரிவினை அரசியல், பணமதிப்பிழப்பு நீக்கம், மத பிரச்சனை, விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு என எல்லாமும் மக்களுக்கு அதிக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே மக்கள் பாஜகவிற்கு குறைந்த அளவில் ஆதரவு அளித்துள்ளனர்.

    English summary
    2019 is a crucial year and the Narendra Modi government would face the electorate. An interesting mood of the nation survey has been conducted to find out what the people feel about the existing government which completes four years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X