For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத், மஹாராஷ்டிராவில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரிப்பு.. ஏபிபி சர்வே

பிரதமர் மோடியின் நான்கு வருட ஆட்சி குறித்து ஏபிபி-சிஎஸ்டிஎஸ் தொலைக்காட்சி சர்வே நடத்தியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடியின் நான்கு வருட ஆட்சி குறித்து ஏபிபி-சிஎஸ்டிஎஸ் தொலைக்காட்சி சர்வே நடத்தியுள்ளது. இதில் குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜகவிற்கு அதிக பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனாலும் சென்ற முறையைவிட பாஜகவின் வாக்கு வங்கி குறைந்து காங்கிரஸின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

    பிரதமர் மோடியின் தலைமையிலான நான்கு வருட பாஜக ஆட்சி எப்படி இருந்தது என்று ஏபிபி-சிஎஸ்டிஎஸ் தொலைக்காட்சி சர்வே நடத்தி இருக்கிறது. இந்த சர்வேயில் ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    Mood of the Nation Survey updates: NDA keeps the support in Gujarat and Maharashtra than UPA

    மஹாராஷ்டிராவில் நடத்தப்பட்ட சர்வே முடிவின் படி, பாஜக மொத்தம் 48 சதவிகித இடங்களை பிடிக்கும். மேலும் காங்கிரஸ் 43 சதவிகித இடங்கள் வரை பிடிக்கும். மீதம் இருக்கும் இடங்களை மாநில கட்சிகள் பெறும். பெரும்பாலான மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்து இருந்தாலும், மஹாராஷ்டிராவில் வெற்றிபெறும் நிலையில்தான் இருக்கிறது.

    கடந்த தேர்தலில் பாஜக 51 சதவிகிதம் பெற்றது. இந்த முறை இது குறையும். அதேபோல் காங்கிரஸ் கடந்த தேர்தலை விட 13 சதவிகிதம் அதிகம் பெறும். அதன்படி பாஜக சென்ற முறையை விட இந்த முறை குறைவான வாக்குகள் பெற்றாலும், ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    குஜராத்தில் பாஜக 54 சதவிகித வாக்குகளை பெறும். காங்கிரஸ் கூட்டணி 42 சதவிகித வாக்குகளை பெறும். அதன்படி குஜராத்தில் காங்கிரஸ் 9 சதவீதம் அதிக வாக்குகளை பெற வாய்ப்பு.பாஜக 4 சதவீத வாக்குகளை இழக்க நேரிடும்.

    குஜராத், பீகார், மஹாராஷ்டிராவில் மட்டுமே பாஜக முன்னிலை வகிப்பதாக இந்த சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக சென்ற முறையைவிட பின்தங்கியேயுள்ளது. சென்ற முறையைவிட பாஜகவின் வாக்கு வங்கி குறைந்து காங்கிரஸின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

    English summary
    In Gujarat, BJP to get 54 per cent votes votes, UPA 42 per cent and Others to get 4 per cent. According to the survey, BJP's vote share will decrease by 4 percent and Congress likely to gain 9 per cent compared to 2014 general elections. Congress had got 33 per cent in 2014.In Maharashtra, if elections were to be held today, NDA has an edge with 48 percent votes, on the other hand Congress likely to improve vote share by 5 per cent. According to the survey, Congress likely to get 40 percent.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X