For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திராணி முகர்ஜியும், ஷீனா போராவும்.. எக்கச்சக்கமான சந்தேகங்கள்.. எங்கு கிடைக்கும் விடை?

Google Oneindia Tamil News

மும்பை: ஷீனா போரா கொலை வழக்கு இந்தியாவிலேயே மிகவும் குழப்பமான, பெரும் பரபரப்பான கொலை வழக்காக மாறும் சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளதாக தெரிகிறது. காரணம், இந்த கொலை வழக்கில் புதைந்திருக்கும் விடை தெரியாத பல மர்மங்கள், சந்தேகங்கள், குழப்பங்கள்.

ஷீனா போராவை இந்திராணி கொலை செய்தார். உடலை எரித்தார். காட்டுக்குள் வீசி விட்டார் என்பது போலீஸ் தரப்பு குற்றச்சாட்டு. இதுதொடர்பாக இந்திராணியும், அவரது டிரைவரும் கைது செய்யபப்பட்டனர். நேற்று இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஷீனா, இந்திராணி குறித்து பல புதுப் புதுத் தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. அனைத்துமே குழப்பத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.

ஷீனா மகளா, சகோதரியா?

ஷீனா மகளா, சகோதரியா?

முதலில் ஷீனாவை, இந்திராணியின் சகோதரி என்று கூறினார்கள். ஆனால் அவர் மகள் என்று பின்னர் போலீஸ் தகவல்கள் கூறின. இது தனக்கே பெரும் அதிர்ச்சியாக இருப்பதாக இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜியும் ஷாக் வெளியிட்டார். பலரும் இந்த புதிய திருப்பத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திராணியின் முதல் திருமணம் எப்போது நடந்தது?

இந்திராணியின் முதல் திருமணம் எப்போது நடந்தது?

இந்திராணி பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்தபோது அவருக்கு வயது 30. 2002ல் திருமணம் நடந்தது. எனவே ஷீனா கொலை செய்யப்பட்ட 2011ம் ஆண்டு, இந்திராணிக்கு வயது 39 ஆகும். ஷீனா கொலை செய்யப்பட்டபோது அவருக்கு வயது 24 என்று கூறுகிறார்கள். இது இடிக்கிறது. அதாவது இந்திராணி தனது 15 வயதில் குழந்தை பெற்றிருக்க வேண்டும். இது மருத்துவ ரீதியாக சாத்தியம்தான். ஆனால் இயல்புக்குப் பொருந்தி வருவது போல இல்லையே என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

எப்படி அத்தனை பேரும் மொத்தமாக நம்பினார்கள்

எப்படி அத்தனை பேரும் மொத்தமாக நம்பினார்கள்

ஷீனா போராவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து விட்டதாக இந்திராணி கூறியதை அத்தனை பேரும் எப்படி மொத்தமாக, ஒரே மாதிரி நம்பினார்கள் என்பது சந்தேகம் தருகிறது. மேலும் இத்தனை வருடமாகவா அவர்களுக்கு சந்தேகம் ஏதும் வரவில்லை என்றும் சந்தேகம் கிளம்புகிறது. யாருக்குமே ஷீனா குறித்து சந்தேகம் வராதது எப்படி என்ற ஆச்சரியமும் எழுகிறது.

2011ல் ஷீனாவின் பேஸ்புக் பக்கம் மூடப்பட்டது

2011ல் ஷீனாவின் பேஸ்புக் பக்கம் மூடப்பட்டது

2011ம் ஆண்டோடு ஷீனாவின் பேஸ்புக் பக்கம் டீஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. அதை யாருமே சந்தேகிக்கவில்லை. அது ஏன் என்று யாருமே கேட்கவும் இல்லை. ஆனால் இந்திராணி தனது பேஸ்புக் பக்கத்தில் ஷீனாவுடன் அமெரிக்காவில் எடுத்த படம் என்று கூறி படங்களைப் போட்டுள்ளார். இது ஏன் யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாமல் போனது என்றும் தெரியவில்லை.

ஒருவரிடம் கூடவா நம்பர் இல்லாமல் போனது

ஒருவரிடம் கூடவா நம்பர் இல்லாமல் போனது

அமெரிக்காவுக்கு ஒருவர் போவதாக இருந்தால் விசா விண்ணப்பத்துடன், அமெரிக்காவில் தாங்கள் தங்கப் போகும் இடத்தின் முகவரி, தொடர்பு எண் உள்ளிட்டவற்றை தெரிவிக்க வேண்டும். அப்படி இருக்கையில் எப்படி யாருக்குமே ஷீனாவின் அமெரிக்க முகவரியையோ அல்லது தொலைபேசி எண்ணையோ கண்டுபிடிக்க முடியாமல் போனது?

டிஎன்ஏ டெஸ்ட் ஏன் எடுக்கவில்லை

டிஎன்ஏ டெஸ்ட் ஏன் எடுக்கவில்லை

இந்திராணி தனது மகளைக் கொன்று விட்டார் என்று டிரைவர் கூறியதுமே இந்திராணியையும், அவரது மாஜி கணவரையும் போலீஸார் கைது செய்து விட்டனர். 3 வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட ஷீனாவின் உடலை போலீஸார் கைப்பற்றினர்களா.. அது ஷீனாவின் உடல் தான் என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ டெஸ்ட் நடத்தினார்களா என்ற விவரம் இதுவரை போலீஸ் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. எந்த மெட்டீரியல் சாட்சியமும் சேகரிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

ஷீனா காணாமல் போனதாக சொன்னது யார்?

ஷீனா காணாமல் போனதாக சொன்னது யார்?

ஷீனா காணாமல் போய் விட்டதாக யாராவது போலீஸில் புகார் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. 2012ம் ஆண்டு மும்பை அருகே உள்ள ரெய்கர் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் பெண் பிணம் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது அடையாளம் தெரியாத பிணம் என்று அப்போது கூறப்பட்டது.

ஷீனா பெயரில் ராஜினாமா செய்தது யார்?

ஷீனா பெயரில் ராஜினாமா செய்தது யார்?

ஷீனா ரிலையன்ஸ் அடாக் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் எச்.ஆர். பணியில் இருந்தார். பின்னர் அதை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் எப்படி ராஜினாமா செய்திருக்க முடியும். எனவே அவரது பெயரில் வேறு யாரோ ராஜினாமா செய்திருக்க வேண்டும். அது யார்?

அதெப்படி பழைய புருஷனை மறைக்க முடியும்?

அதெப்படி பழைய புருஷனை மறைக்க முடியும்?

இந்திராணியின் முதல் கணவர், அவருக்குப் பிறந்த பிள்ளைகள் என யாரையுமே பீட்டர் முகர்ஜிக்குத் தெரியாது என்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும்? யாரையுமே யாருக்குமே தெரியாது என்றால் நம்புவது போல இல்லை என்று சந்தேகம் கிளப்பப்படுகிறது. இந்திராணியின் மகன் மிக்கயில் இப்போது ஆவேசமாக பேசுகிறார். ஆனால் இத்தனை காலமாக அவர் ஏன் மெளனமாக இருந்தார் என்று தெரியவில்லை. இந்திராணியின் பெற்றோர் ஏன் மெளனமாக இருந்தார்கள் என்று தெரியவில்லை.

ஏன் இப்போது உயிர் பெற்றது வழக்கு?

ஏன் இப்போது உயிர் பெற்றது வழக்கு?

3 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கு இப்போது ஏன் திடீரென தூசு தட்டப்பட்டு வெளி வந்துள்ளது. இத்தனை காலமாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த தகவலை இப்போது வெளியிட்டவர் யார்? பீட்டர் முகர்ஜி புதிய சானல்களைத் தொடங்கப் போகிறார் என்று கூறப்படும் இந்த சமயத்தில் இந்தக் கொலை குறித்த தகவல்களை வெளியிட்டது யார்?

ஏன் மிக்கயிலை விசாரிக்கவில்லை

ஏன் மிக்கயிலை விசாரிக்கவில்லை

இதுவரை ஷீனாவின் சகோதரர் மிக்கயில் போரா விசாரிக்கப்படவில்லை. இவர் இந்திராணியின் மகன். எல்லாம் எனக்குத் தெரியும் என்றும் கூறுகிறார். ஆனால் போலீஸார் இதுவரை இவரை விசாரிக்கவில்லை. அது ஏன்?

சஞ்சீவ் கன்னா மர்மம்

சஞ்சீவ் கன்னா மர்மம்

மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கூறுகையில் இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாவை விசாரணை நடத்தி ரெய்கருக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறினார். ஆனால் அவர் நேற்றுதான் கண்டுபிடித்துக் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறியது. அப்படியானால் எப்போது ரெய்கருக்கு கன்னாவைக் கூட்டிச் சென்றது போலீஸ். இதில் குழப்பம் நிலவுகிறது.?

இப்படி இந்திராணி, ஷீனா மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் குறித்து பல சந்தேகங்கள் நிலவுகின்றன. விடைதான் தெரியவில்லை.

English summary
Indrani and Sheena issue has more serious doubts, but there is not even a single answere no one has.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X