For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகியில் மட்டுமல்ல டாப் ரமன் நூடுல்சிலும் ஆபத்து! பரிசோதனையில் தகவல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மேகியை தொடர்ந்து டாப் ரமன் உள்ளிட்ட பிற நூடுல்ஸ் பிராண்டுகளிலும் அளவுக்கு அதிகமான கெடுதல் விளைவிக்கும் மூலப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஐடிசியின் சன்பீஸ்ட், இன்டோ நிசானின், டாப் ரமன், ருச்சி நிறுவனத்தின் கோகா நூடுல்ஸ், சிஜி புட்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாய் வாய் புஜியா, க்லாக்சோஸ்மித்க்லைன் கன்சூமர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பூடில்ஸ், ஏஏ நியூட்ரிசியன் நிறுவனத்தின் யம்மி போன்ற நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா நிறுவனங்கள் அதிக கெடுதல் மூலப்பொருட்களை கொண்டுள்ளது உறுதியாகியுள்ளது.

More instant noodles in trouble: 'Top Ramen, Wai Wai more dangerous than Maggi

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மேற்கண்ட நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டபோது, உணவு ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிக அதிக அளவில் பிபிஎம் எனப்படும் மூலப்பொருள் இருந்தது தெரியவந்தது.

உணவு ஆணையம் 2.5 என்ற அளவில் பிபிஎம் அளவை நிர்ணயித்த நிலையில், மேற்கண்ட உணவு பொருட்களில் அவை 3.4 வரை உயர்வாக காணப்பட்டது.

மேகி நூடுல்சில் இது 3.2 ஆக இருந்தது. அந்த வகையில் டாம் ரமன் உள்ளிட்ட நூடுல்ஸ்கள், அதைவிட அதிக மூலப்பொருளை கொண்டுள்ளது தெளிவாகிறது. இதுகுறித்து சோதனைசாலை வட்டாரங்கள் தகவலை வெளியிட்டுள்ள நிலையில், அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

English summary
After Nestle's Maggi, now high ratios of lead has been found in other instant noodles brands. According to reports, some of the samples of other brands had more lead than Maggi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X