For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள்.. அதிர்ச்சி அளிக்கும் பேரிடர் மேலாண்மை

இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் என்று அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் ஒன்றை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டு உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள்.. பேரிடர் மேலாண்மை

    டெல்லி: இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் என்று அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் ஒன்றை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டு உள்ளது.

    கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அந்த மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. அதே சமயம் கர்நாடகாவிலும் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான், இந்தியாவில் அடுத்த பத்து வருடங்களுக்கு அதிக வெள்ளம் ஏற்படும், இந்த வெள்ளத்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணங்களையும், இழப்புகளையும் பட்டியலிட்டுள்ளது.

    தகவல் கிடைக்கிறது

    தகவல் கிடைக்கிறது

    இந்தியாவில் வெள்ள பாதிப்புகளை கண்டுபிடிக்க நிறைய வசதிகள் உள்ளது என்று தேசிய பேரிடர் மேலாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது. நம்மிடம் இருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை வைத்து எளிதாக பேரிடர்களை முன்கூட்டியே கணிக்க முடியும். அதை முன்கூட்டியே அறிவிக்கவும் முடியும். ஆனாலும், வெள்ளம் வருவதை தடுக்க முடியாது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. இதற்கான காரணத்தையும் கூறியுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை

    என்னதான் விஷயம் முன்கூட்டியே தெரிந்தாலும், இதுகுறித்து அரசும், அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். அதாவது பொதுவாக பேரிடரை கணித்தவுடன் அரசுடன் கூட்டம் போட்டு விவாதிப்பது வழக்கம், ஆனால் என்ன விவாதம் நடத்தினாலும் அதற்கு பிறகு பெரிய அளவில் எந்த மாநில அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

    ஏற்பாடுகள் இல்லை

    ஏற்பாடுகள் இல்லை

    அதேபோல், இந்தியாவில் பெரும்பாலான கட்டிடங்கள், சாலைகள், வீடுகள் வெள்ளத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், நகரமயமாக்கல் காரணமாக பெரிய சேதங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை மாற்ற வழியே கிடையாது, பெரிய அளவில் நடவடிக்கை எடுத்து வெள்ளத்தை தடுத்தால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்றுள்ளனர்.

     அலட்சியமாக இருக்கிறது

    அலட்சியமாக இருக்கிறது

    அதேபோல் இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்கள் பேரிடர்களை சமாளிக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கிறது என்று தெரிவித்துள்ளது. 640 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உத்தர பிரதேசம், உத்தர காண்ட் , பீகார், ஜார்கண்ட், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மோசமான நிலையில் உள்ளது . தமிழ்நாடு, குஜராத் ஆகியவை நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால் மொத்தமாக எல்லா மாநிலமும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுள்ளனர்.

    என்ன மாதிரியான பாதிப்பு இருக்கும்

    என்ன மாதிரியான பாதிப்பு இருக்கும்

    இதனால் இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்து உள்ளது. இதனால் 47,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது. இதை தடுக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    English summary
    More than 16,000 people may die in next 10 years due to floods says National Disaster Management Authority.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X