இந்தியா: கடந்த 10 வருடங்களில் நடந்த இன மோதலில் சிக்கி 2502 பேர் பலி
டெல்லி: கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நடந்த இனமோதல்களில் மட்டும் சுமார் 2500 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் முசாபர்நகரில் நடந்த இன மோதலில் மட்டும் 50 பேர் வரைக் கொல்லப்பட்டனர். சுமார் 40ஆயிரம் பேர் அகதிகளாக்கப் பட்டனர். இது குறித்தான கூட்டம் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு சபை சார்பாக இன்ரு டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் நடந்த இன மோதல்களில் சிக்கி சுமார் 2500 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளாது.

மொத்த மோதல்களின் எண்ணிக்கை....
கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடந்த மொத்த இன மோதல்களின் எண்ணிக்கை 8473.

2502 பேர் பலி....
இந்த இன மோதல் சம்பவங்களில் சிக்கி இதுவரை 2502 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 28 ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மத்திய உள்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்தில் மட்டும்....
அதிலும் குறிப்பாக, இந்த வருடம் மட்டும் முசாபர்நகர் மாவட்ட கலவரம் உள்பட நாடுமுழுவதும் மொத்தம் 479 கலவரங்கள் நடை பெற்றுள்ளது.

107 பேர் பலி...
அதில் சிக்கி மொத்தம் 107 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 1697 பேர் இக்கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

கடந்தாண்டு....
கடந்தாண்டு நடைபெற்ற 668 சம்பவங்களில் சிக்கி 94 பேர் பலியானார்கள். மேலும், 3,117 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக....
இதில் குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த ரெயில் எரிப்பு சம்பவத்தின் போது ஏற்பட்ட கலவரத்தை அடுத்து 722 இடங்களில் இன மோதல்கள் வெடித்தன. இதில் அதிகபட்சமாக 1130 பேர் கொல்லப்பட்டனர். 4375 பேர் பாதிப்படைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications