For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதியில்லை என டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு எழுத 17 வயது கட்டாயம் நிறைவடைந்திருக்க வேண்டும்.

More than 25 years old is not permitted to write the NEET exam: Delhi High Court

இந்நிலையில் நீட் தேர்வு எழுத இந்திய மருத்துவ கவுன்சில் வயது வரம்பை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என டெல்லி ஹைகோர்ட் அதிரடியாக தெரிவித்தது.

இதேபோல் இடஒதுக்கீட்டு பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்றும் டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பை உறுதி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Delhi High Court orders More than 25 years old is not permitted to write the NEET exam. Similarly, the Delhi High Court has ruled that more than 30 years of age can not be selected in the reserved category.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X