For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரதட்சணை கேட்டால் திருமணத்தை நிறுத்தும் 51 சதவீத இந்திய பெண்கள்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டால் 51 சதிவீத இந்திய பெண்கள் திருமணத்தை நிறுத்த தயாராக இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

ஷாதி.காம் என்ற திருமண இணையதளம் திருமணம் ஆகாத இந்திய பெண்களிடம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. ஆன்லைனில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 5 ஆயிரத்து 680 பெண்கள் கலந்து கொண்டனர்.

கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் 24 முதல் 35 வயது வரை உள்ள பெண்கள். கணக்கெடுப்பு முடிவின் விவரம் வருமாறு,

திருமணம்

திருமணம்

மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டால் உடனே திருமணத்தை நிறுத்தி விடுவோம் என்று கணக்கெடுப்பில் கலந்து கொண்ட பெண்களில் 51 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அசிங்கப்படுத்துவோம்

அசிங்கப்படுத்துவோம்

வரதட்சணை கேட்டால் மாப்பிள்ளை வீட்டாரை பொது இடத்தில் வைத்து அவர்களின் பெயரை கெடுத்து அசிங்கப்படுத்துவோம் என்று 48.6 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

சிறை

சிறை

ஷாதி.காம் ஆண்களிடமும் வரதட்சணை பற்றிய கணக்கெடுப்பை நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்களில் 59.8 சதவீதம் பேர் வரதட்சணை கேட்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

சமுதாயம்

சமுதாயம்

வரதட்சணை கேட்போரை சமுதாயத்தினர் முன்னிலையில் அவமானப்படுத்த வேண்டும் என்று 40.2 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர். வரதட்சணையை தவிர்க்க முடியும் என்று 75 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

English summary
More than half of the Indian girls would cancel their wedding if their would-be in-laws demand dowry, according to a new survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X