For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை வந்தார் இஸ்ரேல் சிறுவன் மோஷே.. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பெற்றோரை பறி கொடுத்தவர்!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் தனது பெற்றோரைப் பறி கொடுத்த சிறுவன் மோஷே மும்பை வந்துள்ளார். 2009ம் ஆண்டு இஸ்ரேலுக்கு இடம் பெயர்ந்த பின்னர் முதல் முறையாக மும்பை வந்துள்ளார்.

Moshe arrives in Mumbai

கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடத்திய மிகக் கொடூரமான தாக்குதலில் மோஷேவின் பெற்றோர் ரப்பி கேவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் - ரிவிகா பலியாயினர். மொத்தமாக 166 பேர் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தனர். பெற்றோரைப் பறி கொடுத்தபோது மோஷேவுக்கு 2 வயது.

கடந்த ஆண்டு இஸ்ரேல் சென்ற மோடி மோஷேவைச் சந்தித்தார். அப்போது பிரதமரிடம் பேசிய மோஷே, மும்பை வர விரும்புவதாக கூறியிருந்தார் மோஷே. இந்த நிலையில் தனது பெற்றோர் கொல்லப்பட்ட நரிமன் இல்ல வீட்டைப் பார்வையிட்டு பெற்றோருக்கு அஞ்சலி செலுத்து வந்துள்ளார் மோஷே.

English summary
Israel boy Moshe has arrived in Mumbai today to pay homage to his parents, who were killed by Pakistan terroritsts led by Kasab in 2008, November.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X