தென் இந்தியர்கள் முட்டாள்களாம்.. பாகுபலி படத்திற்காக கட்ஜு சர்ச்சை கருத்து
டெல்லி: வட இந்தியர்களை போலவே பெரும்பாலான தென் இந்தியர்களும் முட்டாள்கள்தான் என்று, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு விமர்சித்துள்ளார்.

பேஸ்புக்கில் இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கருத்தில்,
"வட இந்தியர்களை விட தென் இந்தியர்கள் புத்திசாலிகள் என்று முன்பு நினைத்திருந்தேன். ஆனால், பாகுபலி ரிலீஸ் ஆன பிறகு, பெரும்பாலான தென் இந்தியர்கள், பெரும்பாலான வட இந்தியர்களை போலவே பெரிய முட்டாள்கள் என்று புரிந்துகொண்டேன்" என கூறியுள்ளார்.
பாகுபலி 2 திரைப்படம் ரிலீசாகி 3 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. டிக்கெட் விலையை திரையரங்குகள் உயர்த்தி விற்பனை செய்தும்கூட, தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. சினிமா மோகத்தை அடிப்படையாக வைத்துதான் கட்ஜு இவ்வாறு கருத்து கூறியிருப்பார் என்பது நெட்டிசன்கள் கணிப்பு.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!