For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகனைக் காக்க “கல்லீரல் தானம்”– மைசூரில் ஒரு பாசமான அம்மா!

Google Oneindia Tamil News

பெங்களூர்: மகனின் உயிரைக் காப்பாற்ற தனது கல்லீரலின் ஒரு பகுதியை உறுப்பு தானம் செய்துள்ளார் மைசூரை சேர்ந்தவர் பிரிரானா என்ற அன்பான அம்மா.

பிரிரானாவின் மகன் ஸ்ரேயாஸ், கடந்த 2 மாதங்களாக கடுமையான வயிற்று வலியால்ஹ்h அவதிப்பட்டு வந்தார்.

மைசூர் நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும், ஸ்ரேயாஸ்க்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாக கண்டறிய முடியவில்லை.

மருத்துவமனையில் அனுமதி:

அதைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் பெங்களூரில் உள்ள பிஜிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரலில் நச்சு நீர்

அங்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்த மருத்துவர்கள் சிறுவனின் கல்லீரல் பாதிக்கப்பட்டு, வயிற்றின் அடிப்பகுதியில் நச்சுநீர் கசிவதையும் கண்டறிந்தனர்.

தாமதமான அறுவை சிகிச்சை:

உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் நடந்தது. இருப்பினும் ஸ்ரேயாஸ்க்கு பொருத்த மான கல்லீரல் கிடைக்காததால், அறுவை சிகிச்சை தாமதமானது.

தாய் செய்த தானம்:

சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக தொடங்கியது. இந்நிலையில் அவரது தாய் பிரிரானா தனது கல்லீரலை தானமாக வழங்குவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

70 சதவீத ஆரோக்கியம்:

இருப்பினும் உயிருடன் இருக்கும் போது கல்லீரல் தானமாக வழங்க வேண்டும் என்றால் அவர்கள் குறைந்தபட்சம் 70 சதவீத உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை:

பிரிரானாவுக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததால் அவரது கல்லீரலை ஸ்ரேயாஸ்க்கு பொருத்த மருத்துவர்கள் முன்வந்தனர்.

மனரீதியான அறிவுரைகள்:

மேலும் அவருக்கு மனரீதியான அறிவுரைகளும் வழங்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை 10 மணி நேரம் நடந்தது. பிரிரானாவின் கல்லீரலில் இருந்து 50 சதவீதம் பெறப்பட்டு, ஸ்ரேயாஸ்க்கு பொருத்தப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி:

அறுவை சிகிச்சை முடிந்து இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தாய் மற்றும் மகன் இருவரும் நலமாக உள்ளனர் என்றார்.

மகனின் உடல்நலம் முக்கியம்:

அறுவை சிகிச்சைக்கு பின்னர் பேசிய பிரிரானா, "எனது உடல்நலத்தை காட்டிலும் எனது மகனின் உடல்நலம் எனக்கு மிகவும் அவசியம். அவன் அவதிப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை.

மகிழ்ச்சியில் தாய்:

டாக்டர்கள் எனது கல்லீரலை பொருத்த முடிவு செய்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என் வாழ்க்கையை காட்டிலும் எனது மகனின் வாழ்க்கை மிகவும் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Mysore mother was donated her liver's part to her son for living in Bangalore hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X