For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு ஓடிப் போயிருங்க.. பாகிஸ்தானுக்கு இந்தியா அதிரடி கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் போய் விட வேண்டும். தீவிரவாதத்தை கைவிட வேண்டும். அப்படி செய்வதாக இருந்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளது.

பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தால் தீவிரவாதம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச முடியும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறைச் செயலாளர் இஜாஸ் செளத்ரிக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Move out of PoK- India states in new letter to Islamabad

காஷ்மீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சமீபத்தில் செளத்ரி, ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு ஜெய்சங்கர் பதில் அனுப்பியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...

  • தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச இந்தியா தயார்.
  • ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும்.
  • பாகிஸ்தானுடன் பேசவதாக இருந்தால் இந்த இரு விவகாரம் மட்டுமே பேச்சில் இடம் பெறும்.
  • பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு தெரிவித்து ஆதரவை கைவிட வேண்டும். தீவிரவாதத்தை தூண்டுவதை நிறுத்த வேண்டும்.
  • காஷ்மீர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இல்லை.
  • காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் வன்முறையைத் தூண்டி விடுகிறது.
  • தீவிரவாதிகளை ஊடுறுவச் செய்தும், தீவிரவாதத்தை ஆதரித்தும் காஷ்மீர் பள்ளத்தாக்கை அமைதியிழக்கச் செய்கிறது பாகிஸ்தான்.

இவ்வாறு ஜெய்சங்கரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

English summary
India has written yet another letter to Pakistan reiterating that talks would only be on terrorism and Pakistan occupied Kashmir. The letter written by foreign secretary S Jaishankar states that Islamabad needs to move out of Pakistan occupied Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X