For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் அமைச்சர் அகமது மறைவு-தலைவர்கள் இரங்கல்

நாடாளுமன்றத்தில் கேரள எம்பி இ.அகமது நேற்று மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தில நேற்று மயங்கி விழுந்த கேரள எம்பி இ.அகமது இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர் உரையாற்றினார். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள எம்பி இ.அகமது திடீரென மயங்கி விழுந்தார்.

MP E.Ahamed died: Ministers and political leaders condoled his death

இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் எம்பி அகமதுவின் மறைவு வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, பியூஷ்கோயல் உள்ளிட்டோரும் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் இ.அகமதுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் அகமது அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர் என தெரிவித்துள்ளார்.

Kerala MP E.Ahamed died in hospital due to heart attack. Political leaders and Ministers condoled his death.

60

நாடாளுமன்றத்தில நேற்று மயங்கி விழுந்த கேரள எம்பி இ.அகமது இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

English summary
Kerala MP E.Ahamed died in hospital due to heart attack. Political leaders and Ministers condoled his death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X