சேற்றில்...பசு சாணத்தில் பிறந்தவள்...எனக்கு கொரோனா வராது...பெண் அமைச்சர் நம்பிக்கை!!
போபால்: சேற்றிலும், பசு மாட்டின் சாணத்திலும் பிறந்ததால் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று வராது என்று மத்தியப்பிரதேச பெண் அமைச்சர் இமர்தி தேவி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் பெண்கள் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் இமர்தி தேவி. இவர் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இவருக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்தி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் இமர்தி தேவி, ''நான் சேற்றிலும், பசுமாட்டு சாணத்திலும் பிறந்தவள். ஆதலால் என்னை கொரோனா தாக்காது. மேலும் நான் மாஸ்க் அணியாமல் வெளியே செல்வதில்லை'' என்று தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி இவர் எழுந்து சென்றுள்ளார். இதையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று என்று வதந்தி பரவியது. இவர் கடந்த மூன்றாம் தேதி ஜோதிராதித்ய சிந்தியாவை சந்திக்க சென்று இருக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறியுள்ளார்.
திமுகவினர் கூடிக் கலையும் காகங்கள் அல்ல... கூடிப் பொழியும் மேகங்கள் -மு.க.ஸ்டாலின் கடிதம்
இதற்கு முன்பாக அப்பளம் சாப்பிட்டால் கொரோனா குணமாகி விடும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்து இருந்தார். கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அப்பளத்தில் இருப்பதாக அர்ஜூன் ராம் கூறி இருந்தார். இவரைப் போலவே அசாம் அமைச்சர் சுமன் ஹரிப்பிரியாவும் பசுமாட்டு சாணம், பசுமாட்டு மூத்திரம் இரண்டும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் என்று தெரிவித்து இருந்தார்.