For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப் பெண்ணே.. ம.பி. நோக்கி நடை.. நடுவழியிலேயே பிரசவம்... சிசுவுடன் 150 கி.மீ பயணம்!

Google Oneindia Tamil News

சத்னா: மகாராஷ்டிராவில் இருந்து மத்திய பிரதேசம் நோக்கி நடந்தே சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நடுவழியில் குழந்தை பிறந்தது. அந்த சிசுவை சுமந்தபடியே மேலும் 150 கி.மீ. பயணித்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

    Pregnant migrant labourer delivers baby while walking home

    லாக்டவுன் அமலாக்கப்பட்டதால் வேலைவாய்ப்பு இல்லமால் வருமானமும் இல்லாமல் பல லட்சம் தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் தவிக்கின்றனர். இவர்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    மோடி அறிவித்த ரூ.2 லட்சம் கோடி பேக்கேஜ்.. மக்கள் ஒவ்வொருவருக்கும் பலன் கிடைக்குமா? இதை செய்யனும்மோடி அறிவித்த ரூ.2 லட்சம் கோடி பேக்கேஜ்.. மக்கள் ஒவ்வொருவருக்கும் பலன் கிடைக்குமா? இதை செய்யனும்

    பல ஆயிரம் கி.மீ பயணம்

    பல ஆயிரம் கி.மீ பயணம்

    இது தொடர்பான விவரங்களை அறியாத தொழிலாளர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவே ஆனாலும் பரவாயில்லை என நடந்தே செல்கின்றனர். இப்படி நடந்து செல்லும் போது வழியில் அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் அதிகமானவை. பலர் விபத்துகளில் உயிரிழந்தும் போயுள்ளனர்.

    கர்ப்பிணி மனைவியுடன் பயணம்

    கர்ப்பிணி மனைவியுடன் பயணம்

    மகாராஷ்டிராவின் நாசிக் அருகே மத்திய பிரதேசத்தை தொழிலாளர்கள் குடும்பம் ஒன்று வேலை செய்து வந்தது. லாக்டவுனால் அவர்கள் வேலை இழந்தனர். இதனால் வேறுவழியே இல்லாமல் மத்திய பிரதேசத்துக்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர். கர்ப்பிணி மனைவியோடு மத்திய பிரதேசத்தை நோக்கி இவர்களது பயணம் தொடங்கியது.

    சிசுவுடன் 150 கிமீ பயணம்

    சிசுவுடன் 150 கிமீ பயணம்

    நாசிக்கை அடுத்து சிறிது தொலைவிலேயே கர்ப்பிணி மனைவிக்கு பிரசவ வலி எடுத்தது. நடுவழியிலேயே சுகப் பிரசவமமும் ஆனது. இத்தனைக்கும் யாருடைய உதவியும் இல்லாமல்.. அதே இடத்தில் 2 மணிநேரம் ஓய்வு எடுத்து கொண்டனர் இவர்கள். பின்னர் பிறந்த சிசுவுடனேயே மீண்டும் நடைபயணத்தை தொடர்ந்தனர். பிஞ்சு சிசுவுடன் 150 கி.மீ. தொலைவு நடந்து சென்றிருக்கின்றனர்.

    தன்னம்பிக்கை நட்சத்திரம்

    தன்னம்பிக்கை நட்சத்திரம்

    பின்னர் மத்திய பிரதேசத்தின் சத்னா பகுதியில் போலீசார் இந்த தம்பதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தாயும் சேயும் மருத்துவமனையில் நலமுடன் ஓய்வு எடுத்து வருகின்றனர். பிரசவத்தை கண்டு அஞ்சாமல், பிறந்த சிசுவுடனேயே வைராக்கியமாக தாய்நிலம் நோக்கி சென்ற இந்த பெண் துணிச்சலின் அடையாளம் என்பதில் மிகை இல்லை!

    English summary
    A pregnant migrant labourer who walked to Madhya Pradesh gave birth on the way.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X