For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸில் சேர்ந்தார் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ்

By Siva
Google Oneindia Tamil News

Mukesh Ambani's son Akash joins Reliance Industries; begins at telecom arm Reliance Jio
மும்பை: முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அவர் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமில் 4ஜி சேவை துவக்க பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ், ஆனந்த் என்ற மகன்களும், இஷா என்ற மகளும் உள்ளனர். இதில் மூத்தவரான ஆகாஷ்(22) தனது தந்தையின் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அவர் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமில் 4ஜி சேவைகள், கால்சென்டர் வேலைகள் உள்ளிட்டவைகளை கவனித்து வருகிறார்.

ஆகாஷ் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் படித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அவர்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸில் இன்டர்னாக சேர்ந்தார்.

ஆகாஷ் தற்போது தினமும் அலுவலகத்திற்கு வருகிறாராம். வந்து நிறுவன கூட்டங்களில் தனது தந்தையுடன் கலந்து கொள்கிறாராம். இது போன்ற அனுபவ படிப்பு தான் மகனுக்கு முக்கியம் என்று நினைக்கிறாராம் முகேஷ்.

முகேஷ் அம்பானி 1981ம் ஆண்டில் தனது 24வது வயதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸில் சேர்ந்தார். ரிலையன்ஸ் நிறுவனம் டெலிகாம் பிரிவை துவங்க முக்கிய காரணமாக இருந்தவர் முகேஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mukesh Ambani's elder son Akash(22) has joined Reliance Indistries and is involved in Reliance Jio Infocomm's 4G venture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X