For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடியை எதிர்கொள்ள 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் முலாயம்சிங் யாதவ்!

By Mathi
|

லக்னோ: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைப் போலவே சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆசம்கார் லோக்சபா தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிட முடிவு செய்துள்ளதால் அதை ஒட்டிய கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் தனது கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் அசாம்கரில் போட்டியிட முலாயம் முடிவு செய்துள்ளார்.

Mulayam Singh Yadav to contest from two seats

முலாயம்சிங் யாதவ் தற்போது மணிபுரி தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் மணிபுரி தொகுதியிலும் ஆசம்கார் தொகுதியிலும் போட்டியிட முலாயம்சிங் யாதவ் முடிவு செய்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலர் ராம்கோபால் யாதவ், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று ஆசம்கார் மற்றும் மணிபுரி தொகுதிகளில் முலாயம்சிங் போட்டியிட இருக்கிறார் என்றார்.

முன்னதாக அசாம்கர் தொகுதியில் மாநில அமைச்சர் பல்ராம் யாதவ் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தல் ஆசம்கார் தொகுதியில் பாஜகவின் ராம்காந்த் யாதவ் 50 ஆயிரம் வாக்குகள் வெற்றி பெற்றார். 2வது இடத்தில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் அக்பர் அகமது இருந்தார். இங்கு சமாஜ்வாடி கட்சி 3வது இடத்துக்குத்தான் வர முடிந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Samajwadi Party supremo Mulayam Singh Yadav will contest from the Azamgarh Lok Sabha seat, besides Mainpuri which he presently represents in Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X