For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு விவகாரத்தை கேரள அரசு சரியாக கையாளவில்லை- அச்சுதானந்தன்

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கேரள அரசு சரியாக கையாளவில்லை என்று அம்மாநில முன்னாள் அமைச்சர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

Mullaiperiyar Dam issue: Achuthanandan accuses Kerala government

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், கேரளா அரசு கொண்டு வந்த அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கேரள அரசு சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையை கூட்டி விவாதம் நடத்தி கேரள அரசு உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே தீர்ப்பு குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி கருத்து கூறுகையில்:

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முழு விவரம் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கேரள மக்களின் பாதுகாப்பு கருதியே புதிய அணைக்கு திட்டமிடப்பட்டது என்றும் தெரிவித்தார்.

English summary
Former Kerala Chief Minister V. S. Achuthanandan said on Wednesday that there was an immediate need for the state assembly to meet to discuss and deliberate on the Supreme Court's latest verdict on the Mullaperiyar Dam case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X