For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப்பெரியாறு அணை...நீர் வரத்து அதிகரிப்பு... வெள்ளப்பெருக்கு ஆபத்து!!

Google Oneindia Tamil News

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து இருப்பதால், அணையின் நீர் மட்டம் அபாய கட்டத்தை நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. விநாடிக்கு 17,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும். தற்போது அணையில் 130.5 அடி நீர் உள்ளது. ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 123.2 அடி அதிகரித்துள்ளது.

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இருக்கும் அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு நேற்று முதல் 1650 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் 142 அடிக்கு நீர் வந்த பின்னர் திறந்தால் ஆபத்து என்பதால் அதற்கு முன்னதாக சிறிது சிறிதாக நீர் திறந்து விடப்படுகிறது. நீர் நிரம்பிய பின்னர் திறந்தால் பெரிய அளவில் சேதாரம் ஏற்படலாம் என்பதால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

Mullaperiyar dam is getting fill 7 feet increased in one day danger is awaiting

கடந்த 2018ஆம் ஆண்டில் இதேபோல் கன மழை பெய்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்த காரணத்தினால், திடீரென அணை திறக்கப்பட்டது. பெரியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டு அந்த அணையும் திறந்து விடப்பட்டதால், பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருந்தது.

கோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு.. விசாரணை தொடங்கியதுகோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு.. விசாரணை தொடங்கியது

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடிக்கு வந்து விட்டால் திறந்து விட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இல்லையென்றால் அணைக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த அணைக்கு நீர் வரத்து 136 அடியை தொட்டவுடன் அணையை திறப்பது குறித்து இடுக்கி கலெக்டர் தேனி கலெக்டருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்

Mullaperiyar dam is getting fill 7 feet increased in one day danger is awaiting

முல்லைபெரியாறு அணை தற்போது மத்திய நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அணையின் நீர்மட்டம் உயரும்போது பெரியாறு ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் மக்கள் வேறு பகுதிக்கு மாற்றப்படுவார்கள். அந்த வகையில் தற்போதும் எச்சரிக்கை விடப்படலாம் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக மாறிய இடுக்கி

    தமிழக, கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டு இருக்கும் இடம் கேரளாவுக்கு உரிமையானது. தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது. ஆங்கிலேயர்களால் 1895 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு உயரம் 155 அடி ஆகும். முன்பு 152 அடி நீர் தேக்கப்பட்டு வந்தது. அணைக்கு ஆபத்து என்பதால் அணையில் முன்பு 136 அடி நீர் மட்டுமே தேக்கப்பட்டு வந்தது. தற்போது, 142 அடியாக இருப்பு வைக்கப்படுகிறது.

    English summary
    Mullaperiyar dam is getting fill 7 feet increased in one day danger is awaiting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X